புதனின் வக்கிர பெயர்ச்சி- செம சூப்பராக வாழப் போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒரு தனித்துவமான தன்மை உண்டு. மேலும் கிரகங்கள் அவர்களுடைய கால நிலைக்கு ஏற்ப தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள். அப்படியாக ஒருவருடைய அறிவுத்திறனை குறிக்கக்கூடிய புதன் பகவான் கடந்த பத்தாம் தேதி துலாம் ராசியில் வக்கிர நிலை அடைந்துள்ளார்.
இவர் வருகின்ற 30 ஆம் தேதி வரை அவருடைய வக்கிர நிலையானது தொடர் உள்ளது. அப்படியாக, புதன் பகவானின் இந்த வக்கிர பெயர்ச்சியானது பன்னிரண்டு ராசிகளுக்கும் பல்வேறு விதமான தாக்கங்களை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அவை மிகப்பெரிய அளவில் நன்மையை செய்ய உள்ளது. இதன் அடிப்படையில் புதன் பகவானால் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறப்பான பலனை பெரும் மூன்று ராசிகள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு புதன் பகவானுடைய இந்த வக்கிர பெயர்ச்சியானது அவர்களுடைய வாக்கு ஸ்தானம் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறது. இவர்களுடைய பேச்சுத் திறமையால் இவர்கள் தொழில் வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் மிகப்பெரிய ஒரு உயரத்தை அடையப் போகிறார்கள். இவர்களுடைய பேச்சால் இவர்கள் செய்யக்கூடிய வேலை அனைத்தும் இவர்களுக்கு சாதகமாக அமையக்கூடிய நிலை உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசிக்கு புதன் பகவான் உடைய இந்த வக்கிர பெயர்ச்சியானது இவர்களுடைய மனதில் இருக்கக்கூடிய குழப்பத்தை விலக்கப் போகிறது. மிக தெளிவாகவும் இவர்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ஒரு நல்ல பயணமாகவும் அமையப்போகிறது. குடும்பத்தில் இவர்களுடைய மதிப்பு உயர்ந்து இவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் அவர்கள் ஆதரவு கொடுக்கப் போகிறார்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்கு புதன் பகவான் உடைய இந்த பெயிற்சியானது இவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயத்தை மிக சுலபமாக செய்யக்கூடிய ஒரு நிலையை கொடுக்கப் போகிறது. திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடிய அமைப்பு உண்டாகும். நீண்ட நாட்களாக இவர்களுடைய நினைவாகாத கனவுகள் நினைவாக கூடிய ஒரு அற்புதமான அமைப்பு பெறப் போகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |