அதிர்ஷ்டம் பல மடங்கு தரும் துளசி திருக்கல்யாணம் வழிபாடு - நேரம் தேதி இதோ!
நம்முடைய இந்து மதத்தில் துளசி என்பது மகாலட்சுமி அம்சமாக போற்றி வழிபாடு செய்யப்படுகிறது. மேலும் இந்துக்கள் அனைவரது வீடுகளிலும் கட்டாயமாக துளசி செடி வைத்திருப்பார்கள். அதோடு தினமும் துளசி செடிக்கு அவர்கள் நீர் ஊற்றி விளக்கேற்று வழிபாடு செய்வதையும் நாம் பார்க்க முடியும்.
அப்படியாக ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் நிறைய ஆன்மீக விசேஷங்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது. அதில் ஒன்றுதான் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி என்று அனுஷ்டிக்கப்படும் துளசி விவாகம்.
ஐப்பசி மாதத்தில் நடக்கக்கூடிய ஒரு முக்கியமான விசேஷ நாட்களில் இந்த துளசி விவாகம் பங்கு வகிக்கிறது. இதை துளசி விவாகம் என்று சொல்வார்கள் அல்லது துளசி திருக்கல்யாணம் என்று சொல்வார்கள். அதாவது துளசிக்கும் மகாவிஷ்ணுகும் நடக்கக்கூடிய திருக்கல்யாணம் தான் இந்து துளசி விவாகம் என்று அழைக்கப்படுகிறது.

சதுர் மாதம் என்று சொல்லப்படும் நான்கு மாதம் விஷ்ணு பகவான் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் இந்த விவாதம் நடைபெறும். இந்த 2025 ஆம் ஆண்டு இந்த துளசி விவாகம் ஆனது ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 2ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.
கார்த்திகை மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் துவாதசி திதி நவம்பர் 2205 அன்று காலை 7:31 மணிக்கு தொடங்கி நவம்பர் 3 2025 காலை 5. 07 மணி வரை இருக்கிறது. துளசி செடிக்கும் விஷ்ணு பகவானின் இன்னொரு அம்சமான சாளக்கிராமத்திற்கும் திருமணம் செய்து வைப்பது தான் இந்த துளசி திருக்கல்யாணம் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு திருக்கல்யாணம் செய்து வைக்கும் பொழுது திருமணத்தில் பெண்ணை கன்னிகாதானம் செய்தபலன்களை கொடுக்கிறது. இதனால் குடும்பத்தில் திருமண தடைகள் தாமதங்களை சந்தித்து வருபவர்களுக்கு திருமண தடை விலகி அவர்கள் வாழ்க்கையில் வெகுவிரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
மேலும் துளசி விவாகம் வீடுகளில் செய்வது என்பது மிகவும் எளிதானது தான். இதற்கு நம்முடைய வீடுகளை சுத்தம் செய்து கோலம் போட்டுக் கொண்டு ஒரு பக்கத்தில் துளசி செடியை வைக்க வேண்டும். மறுபக்கத்தில் சாளக்கிராமம் வைக்க வேண்டும். பிறகு துளசி செடி முன்பு நெய் விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

அதன் பின் ஒரு கலசத்தில் நீர் விட்டு அதில் ஒரு சில மாவிலைகள் மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின்னர் துளசியின் அருகில் புதிய சிவப்பு நிற புடவை அல்லது பட்டு துணி வைத்து அதன் மீது வளையல், மஞ்சள், குங்குமம் கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை வைக்க வேண்டும்.
இந்த பூஜைக்காக இனிப்பு நெய்வேத்தியங்களான பாயாசம் சர்க்கரை பொங்கல் என்று நம்மால் எது முடிகிறதோ அந்த நெய்வேத்தியங்கள் செய்யலாம்.
பிறகு கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிய பிறகு நம்முடைய பிரார்த்தனையை வைத்து நெய்வேத்தியங்களை சுற்றங்களுடன் பகிர்ந்து கொண்டு நிறைவு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஒருவர் வீடுகளில் துளசி விவாகம் செய்து வழிபாடு செய்யும் போது அவர்களுக்கு திருமண தடை மற்றும் வீடுகளில் கடன் பிரச்சனை, மன அழுத்தம் போன்றவை நீங்கி அதிர்ஷ்டம் பல மடங்கு பெருகுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |