2026: கடகத்தில் குருவுடன் இணையும் சுக்கிரன்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

By Sakthi Raj Jun 09, 2026 05:50 AM GMT
Report

 2026 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே குரு அவருடைய உச்சவிடான கடக ராசியில் இருப்பதால் இந்த சேர்க்கை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எதிர்மறையான தாக்கங்களை கொடுக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

அவர்கள் ஒரு மாதத்திற்கு கவனமாகவும் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள். அப்படியாக, எந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

2026: கடகத்தில் குருவுடன் இணையும் சுக்கிரன்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் | 2026 June 8 Sukiran Transit Warning For 3 Zodiac

2026 குரு பெயர்ச்சி: துலாம் ராசிக்கு 10-ல் குரு இருப்பதால் பதவி பறிப்போகுமா?

2026 குரு பெயர்ச்சி: துலாம் ராசிக்கு 10-ல் குரு இருப்பதால் பதவி பறிப்போகுமா?

மேஷம்:

சுக்கிரன் கடக ராசிக்குள் செல்வதால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் சற்று குழப்பமான சூழ்நிலை உருவாக காத்திருக்கிறது. அதனால் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.

திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதேபோல், பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். வீடு வாகனம் சொத்து சார்ந்த விஷயங்களில் சில தடை வந்து செல்லலாம் கவனமாக கையாள வேண்டும்.

தனுசு:

சுக்கிர பகவானுடைய இந்த இணைவு தனுசு ராசியினருக்கு ஒரு சோதனை காலமாக இருக்கப் போகிறது. போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடிய மாணவர்கள் எதிர்பார்த்த முடிவுகள் இல்லாமல் கவலையை கொள்ளலாம்.

நிதி நிலைமையில் சற்று பின்னடைவுஏற்படலாம். எந்த ஒரு முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு முன்பும் குடும்பத்தினரிடம் நன்கு ஆலோசனை செய்து எடுப்பது அவசியமாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும்.

2026 ஜூன்: குபேர யோகத்தை பெரும் முக்கிய ராசிகள் யார் ?

2026 ஜூன்: குபேர யோகத்தை பெரும் முக்கிய ராசிகள் யார் ?

கும்பம்:

இந்த காலகட்டங்களில் கும்ப ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். அதிலும் பணியிடங்களில் தேவையில்லாத வாக்குவாதம் குடும்ப விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இந்த காலகட்டங்களில் உருவாகக்கூடிய சவால்கள் உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்க கூடும் என்பதால் நிதானத்தை கடைபிடித்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு தவறான நட்புகளால் பிரச்சனைகள் உண்டாகும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US