கார்த்திகை பௌர்ணமி: இந்த 3 பொருட்களை வாங்க மறக்காதீர்கள்
பொதுவாகவே பௌர்ணமி தினமானது வழிபாட்டிற்கு உரிய மிகச் சிறந்த நாளாகும். இந்த நாளில் நாம் சிவபெருமான், பெருமாள், முருகன், அம்பிகை, குலதெய்வம் மகாலட்சுமி என எல்லா தெய்வங்களையும் வழிபாடு செய்தால் நமக்கு பல மடங்கு நன்மைகளும் பலன்களும் கிடைக்கும். அப்படியாக பௌர்ணமி தினமானது மிகவும் சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிலும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வரும் பௌர்ணமி தினம் வழிபாடுகளுக்கும் பரிகாரங்கள் செய்வதற்கும் மங்கள காரியங்கள் செய்வதற்கும் ஒரு நல்ல நாளாகவும் அன்றைய நாள் செய்யக்கூடிய காரியங்கள் நமக்கு அதிகமான பலன்களை பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
அப்படியாக அந்த நாட்களில் இந்த மூன்று பொருட்களை வாங்கி வைத்தால் நமக்கு மகாலட்சுமியின் முழு அருள் கிடைக்கும். இதனால் வீடுகளில் செல்வ வளமும் கடன் சுமையும் குறையும். அன்று வாங்க வேண்டிய அந்த மூன்று பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

கார்த்திகை பௌர்ணமி அன்று வாங்க வேண்டிய 3 பொருட்கள்:
1.திருக்கார்த்திகை தீபத்தன்று புதிய அகல் விளக்குகளை நாம் வாங்குவது ஒரு நல்ல பலன் கொடுக்கும். மண்ணால் செய்த அகல் விளக்குகளை வாங்கி வீடுகளில் விளக்கேற்றும் பொழுது நம் வீடுகளில் சூழ்ந்துள்ள இருள் விலகி நேர்மறை ஆற்றல் பெருகுவதோடு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அன்றைய தினம் நிறைய விளக்குகள் வாங்க வேண்டும் என்பது அல்ல நம்மால் முடிந்த விளக்குகள் ஒன்று அல்லது இரண்டு போன்ற விளக்குகள் வாங்கினாலும் நமக்கு ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதாகும்.
2. திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று படைக்க வேண்டிய முக்கியமான நெய்வேத்தியங்களில் மாவிளக்கு ஒன்று. இது செய்வதற்காக பச்சரிசி மாவு வெல்லம்ஆகிவற்றை புதிதாக வாங்கி மாவிளக்கு செய்து நாம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். மாவிளக்கு தானிய லட்சுமி அம்சமாக கருதப்படுகிறது. அதனால் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது உணவு பொருட்களுக்கு நமக்கு ஏழு ஜென்மங்களுக்கும் எந்த குறையும் வராது.
3. கார்த்திகை தீபத்திருநாளன்று குங்குமம் மற்றும் மஞ்சள் வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இரண்டுமே இந்து மதத்தில் மிகவும் மங்களகரமான பொருட்களாக பார்க்கப்படுவதால் அன்றைய நாள் இந்த இரண்டு பொருட்களை வீடுகளில் வாங்கி வைத்து வழிபாடு செய்யும்பொழுது ஆதி சக்தியின் அருள் நமக்கு கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |