வீட்டில் மறந்தும் வைக்க கூடாத 7 பொருட்கள்
நம்முடைய வீடு நமக்கு கோயில் போன்றது.அப்படியாக அங்கு நம் மனம் நேர்மறை ஆற்றல் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்தற்கு வழிவகுக்கும் பொருட்களையே வைக்க வேண்டும்.நம் கண்களுக்கு எது அதிகம் தென் படுகிறதோ அதுவே நம்முடைய ஆழ் மனதிற்குள் சென்று சில தாக்கத்தை உண்டாக்கும்.
மேலும் வாஸ்து ரீதியாக வீட்டில் சில பொருட்களை வைக்க கூடாது என்று சொல்கிறார்கள்.அதை பற்றி பார்ப்போம்.
நடராஜர் சிலை:
சிவ பக்தர்கள் அல்லாதவர்களுக்கும் நடராஜர் பார்த்தால் மிகவும் பிடிக்கும்.காரணம் சிலையின் தோற்றம்.எவ்வளவு அழகாய் இந்த நடராஜர் சிலை இருந்தாலும் நம்முடைய வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
சிவன் பெருமான் மிகுந்த கோபத்துடன் வெளிப்பட்ட காட்சி தான் ஒரு கால் தூக்கிய நடராஜர் அவதாரம்.மேலும் புராணங்களில் நாம் படித்திருப்போம் சிவன் சினம் கொண்டு அழிக்கும் பொழுது ஆனந்த தாண்டவம் ஆடுவார் என்று.ஆதலால் வீட்டில் நடராஜர் சிலை வைப்பதை தவிர்ப்பது நல்லது.
கொடூரமான விலங்குகள்:
சிலருக்கு விலங்குகள் மீது அதிகம் விருப்பம் இருக்கும்.இருந்தாலும் வீட்டில் கொடூரமாக காட்சி கொடுத்து போருக்கு செல்லும் படியான படங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.ஆவ்வாறு வைக்கும் பொழுது வீட்டில் உள்ள நபர்களின் எண்ணமும் கொடூரமாக மாற வாய்ப்பு உள்ளது.
மகாபாரத காட்சிகள்:
மனிதனாக பிறந்த அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் மஹாபாரதம்.ஆனால் ஒரு பொழுதும் வீட்டில் மஹாபாரதம் போர் காட்சிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.மஹாபாரதம் முழுவதும் தர்மம் அதர்மம் என்று நீதி போர் நடந்து கொண்டு இருப்பதாலல் வீட்டில் வைப்பதால் வாழ்க்கை போர் மிகுந்ததாக மாற வாய்ப்பு உள்ளது.
மந்திரங்கள்:
மஹாபாரதத்தில் கூறிய வசனங்கள் மந்திரங்கள் வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் எதிர்மறை ஆற்றல் உண்டாகக்கூடும்.
ஓடும் நீர்:
ஓடும் நீர் போன்ற படங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.அவ்வாறு வைக்கும் பொழுது சந்தோசம் பணம் இவை எல்லாம் வந்த வழியாக ஓடி விடும் என்று கருதப்படுகிறது.
முழுகும் கப்பல்:
முழுகும் கப்பல் போன்ற காட்சிகள் அல்லது படத்தின் புகைப்படம் வைக்கும் பொழுது நம்முடைய சந்தோசம் மூழ்கி போக கூடிய வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.அதனால் வீட்டில் பிரச்சனை உண்டாகும்.
தாஜ்மஹால்:
தாஜ்மஹால் உலக அதிசயத்தின் முக்கிய இடம் பிடித்ததாக இருந்தாலும் அது ஒரு சமாதி.பொதுவாக சமாதி போன்ற எதிர் மறை ஆற்றல் கொடுப்பது வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மேற்கொண்டு சொன்ன விஷயங்கள் எல்லாம் பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு சில தொந்தரவுகள் கொடுக்க கூடும்.ஆதலால் அவை வீட்டில் வைப்பதை தவிர்க்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |