தமிழகத்தின் முக்கியமான கோயில்களின் பிரசாதங்கள் என்னென்ன தெரியுமா?
பிரசாதம் என்பது கோவிலில் இறைவனுக்கு படைக்கப்படும் தூய்மையான உணவுப் பொருட்கள்.
பிரசாதம் ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக நைவேத்தியமாக படைக்கப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறார்கள்.
அதன்படி, ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு பிரசாதம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
அந்தவகையில், எந்த கோவிலில் என்ன பிரசாதம் வழங்கப்படுகிறது என்று தெரிந்துகொள்வோம்.

1. சபரிமலை ஐயப்பன் கோவில்- அரவணை பாயாசம்.
2. திருச்செந்தூர் முருகன் கோவில்- திருபாகம்.
3. திருவாரூர் தியாகராஜர் கோவில்- நெய் தேன்குழல், உளுந்து வடை.
4. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்- மிளகு உளுந்து வடை.
5. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்- பால்கோவா.
6. மதுரை கள்ளழகர் கோவில்- தோசை.
7. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்- இட்லி.
8. சிதம்பரம் நடராஜர் கோவில்- திருவாதிரை களி.
9. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்- மிளகு புளியோதரை.
10. பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில்- மோதகம்.
11. கொல்லூர் மூகாம்பிகை கோவில்- சுக்கு கஷாயம்.
12. காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்- புட்டு.
13. உப்பிலியப்பர் கோவில்- உப்பில்லாத வடை.
14. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்- அக்கார வடிசல்.
15. திருப்பதி பெருமாள் கோவில்- லட்டு.
16. சிங்கிரி குடி லக்ஷ்மிநரசிம்மர் ஆலயம்- பானகம்.
17. திருப்புல்லாணி கோவில்- பால் பாயசம்.
18. திருச்சானூர் பத்மாவதி கோவில்- மாலாடு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |