ஆடி கிருத்திகை 2025: குழந்தை வரம் கிடைக்க செய்யவேண்டிய விரத முறைகள்
இந்து மதத்தில் ஆடி மாதம் என்பது மிகவும் விஷேசம் நிறைந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் இறைவழிபாட்டிற்கு உரிய முக்கியமான நாளாகும். இந்து மதத்தில் கிருத்திகை நட்சத்திரத்துடன் இணையும் நாளானது ஆடி கிருத்திகையாக கருதப்படுகிறது.
இது முருகப்பெருமான் வழிபாட்டிற்கு உரிய மிக சிறந்த நாளாகும். இந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி கிருத்திகையானது இந்த ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதேப்போல், ஆகஸ்ட் 16 ஆம் தேதி சில கோயில்களில் ஆடி கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. மேலும், ஒரு மாதத்தில் இரண்டு முறை ஒரு நட்சத்திரம் வந்தால் இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.
அப்படியாக, ஆகஸ்ட் 16 ஆம் தேதி நாம் ஆடி கிருத்திகை முன்னிட்டு நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் அதிகாலை எழுந்து நீராடி பூஜையறையை சுத்தம் செய்து முருகப்பெருமானின் படம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அதோடு, பூஜை அறையில் ஷட்கோண (அறுங்கோண) வடிவிலான கோலமிட வேண்டும். அதில் சரவணபவ என்று எழுதி ஒவ்வொரு வார்த்தைகளுக்கு மேல் ஒரு விளக்கு என ஆறு விளக்குகளை வைக்க வேண்டும். அந்த விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.
அதோடு, முருகப்பெருமானுக்கு பிடித்த செவ்வரளி போன்ற சிவப்பு நிறம் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். மேலும், கூடுதலாக முருகப்பெருமானின் சிலை அல்லது வேல் வைத்திருப்பவர்கள் பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம்.
முருகப்பெருமானுக்கு என்ன படைக்க வேண்டும்?
முருகப்பெருமானின் படம் சிலை அல்லது வேல் வைத்திருப்பவர்கள் ஒரு வாழை இலை விரித்து அதில் பழங்கள் மற்றும் முருகனுக்கு பிடித்த இனிப்பு பொங்கல் அல்லது சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும். அதிலும் மிகவும் விசேஷமான பால், தேன், நெய், சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து செய்யப்படும் பஞ்சாமிர்தமானது முருகப்பெருமானுக்கு படைக்கலாம்.
மேலும், பச்சரிசி மாவினால் செய்யப்பட்ட இனிப்பு கொழுக்கட்டை அல்லது பிற இனிப்பு வகைகளை படைக்கலாம். இவை நம் முருகனின் அருளைப்பெற்று கொடுக்கும். மேலும், விரதம் இருப்பவர்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடிந்தால் இருக்கலாம். முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம்.
அன்றைய நாளில் முருகனின் மந்திரங்கள், திருப்புகழ் சொல்லி வழிபாடு செய்வது என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. இவ்வாறு செய்வது நமக்கு நாம் கேட்ட வரத்தை வழங்குவதோடு நம் மனமும் தெளிவு பெரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







