வாஸ்து: செருப்புகளை இந்த திசையில் கழற்றி விடாதீர்கள்- பண கஷ்டம் வருமாம்
மனிதர்களுடைய வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் ஜோதிட ரீதியாக அனைத்து கோணங்களிலும் நம்முடைய வாழ்க்கை அதனுடன் தொடர்பு உடையதாக இருக்கும். அந்த வகையில் வாஸ்து என்பது ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அதாவது தொழில் இடமாக இருக்கட்டும் அல்லது நாம் வசிக்கும் இடமாக இருக்கட்டும் வாஸ்து சரியாக இருக்கின்ற நேரத்தில் தான் அந்த மனிதருக்கு அந்த இடத்தில் ஒரு நிம்மதியான சூழல் இருக்கும். வாஸ்து சரி இல்லாத இடங்களில் எவ்வளவு உழைத்தாலும் அந்த பணம் நம் கைகளில் தங்காத நிலை தான் கொடுக்கும்.
அந்த அளவிற்கு வாஸ்து நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பங்கு பெறுகிறது. மேலும் வாஸ்துவில் குறிப்பிட்ட சில பொருட்களை குறிப்பிட்ட சில இடங்களில் தான் வைக்க வேண்டும் என்ற ஒரு சில விதிமுறைகள் இருக்கிறது.

அதை நாம் அவ்வாறாகவே பின்பற்றி வர ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். அப்படியாக, வாஸ்து ரீதியாக நம்முடைய காலணிகளை எங்கே கழற்றி வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காரணம் நம்முடைய நுழைவாயிலில் தான் நம்முடைய காலணிகளை கழற்றி வைக்கின்றோம். ஆதலால் இது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
நம் காலணிகளை நிலை வாசலுக்கு நேராக கழற்றிவிட்டு செல்லும்பொழுது நிச்சயம் நம்முடைய வீடுகளுக்கு சில தோஷங்கள் உண்டாகிறது. அப்படியாக வாஸ்து ரீதியாக நம்முடைய காலணிகளை எந்த திசையில் கழற்றி வைக்க வேண்டும் என்று பார்ப்போம்.
நம்முடைய குடும்பத்தில் காலணிகளை நம்முடைய வசதிக்கேற்ப ஆங்காங்கே கழற்றி வைத்துவிட்டு வீட்டிற்குள் செல்வதை காணலாம். ஆனால் வாஸ்து ரீதியாக செருப்புகளை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. காரணம் இது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யக் கூடியதாக அமைந்து விடுமாம்.
மேலும், இந்த திசைகளில் நாம் செருப்புகளை கழற்றி வைக்கும் பொழுது மகாலட்சுமி தாயாரின் கோபத்திற்கு ஆளாக நேரும் என்று சொல்கிறார்கள். அதைவிட இந்த திசையில் நம்முடைய செருப்புகளை கழற்றி வைக்கும் பொழுது நிச்சயம் பொருளாதாரத்தில் ஒரு பின்னடைவு உண்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள்.

திடீரென்று குடும்பத்தில் பிரச்சனைகள் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் என்று சந்திக்க நேரமாம். ஆக நம்முடைய காலணிகளை அல்லது காலணிகளை வைக்கக்கூடிய அலமாரியை எப்பொழுதும் வீட்டிற்கு தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
அதேபோல் வெளியில் இருந்து வீட்டிற்குள் வரும் பொழுது தெற்கு அல்லது மேற்கு திசையில் மட்டுமே காலணிகளை கழற்றி வைக்க வேண்டும். வீட்டின் பிரதான வாசலில் காலணிகளை மற்றும் செருப்புகளை கழற்றக் கூடாது என்பதை நாம் எப்பொழுதும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |