2024 அனுமன் ஜெயந்தி எப்பொழுது?முதன் முதலில் அனுமன் விரதம் இருந்தது யார் தெரியுமா?
அனுமனை போல் பக்தியிலும் தைரியத்திலும் யாரையும் காணமுடியாது.துணைக்கு துணையாக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிவார் அனுமன்.அப்படியாக அனுமனுக்கான விஷேசமான நாள் தான் அனுமன் ஜெயந்தி.
2024 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி எப்பொழுது வருகிறது?அன்றைய தினத்தில் அனுமனின் பரிபூர்ண அருளை பெற நாம் செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். மார்கழி மாதம் கடவுளுக்கே அர்ப்பணிக்க பட்ட மாதம் ஆகும்.
அந்த மாதத்தில் அனுமன் ஜெயந்தி வருவது கூடுதல் விஷேசம்.பொதுவாக அனுமனை வழிபட்டால் ஒருவர் வாழ்க்கையில் உள்ள காரிய தடைகள் விலகுவதோடு,அவர்களுக்கான எதிரிகளும் விலகி,மனத்தூய்மை,மகிழ்ச்சி உருவாகும்.
அனுமன், மார்கழி மாத அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி மார்கழி அமாவாசை திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 04.44 மணி துவங்கி, டிசம்பர் 31ம் தேதி காலை 05.03 வரை அமாவாசை திதி உள்ளது.
அதே போல் டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 12.19 மணி துவங்கி, டிசம்பர் 31ம் தேதி அதிகாலை 01.12 வரை மூலம் நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் முன்னோர் வழிபாட்டுடன் அனுமனையும் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் பல நன்மைகளை பெறலாம்.
புராணங்கள் படி அனுமனை வழிபாடு செய்து முதன்முதலில் விரதம் மேற்கொண்டது பாண்டவர்களின் பத்தினியான திரெளபதி தான்.மேலும்,எவர் ஒருவர் அனுமன் விரதம் மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி,அமைதி நிறைந்த வாழ்க்கை கிடைக்கும் என பிரம்ம தேவர், வாயு பகவானுக்கு சத்தியம் செய்து வரம் அளித்ததாக சொல்லப்படுகிறது.
அதோடு,பாண்டவர்கள் வனவாசத்தில் தவிர்க்க முடியாத துன்பத்தை அனுபவித்த பொழுது வேத வியாச மகரிஷி, தர்மனுக்கு உபதேசித்த விரதம் இதுவாகும்.அதனால் இத்தனை அற்புதம் நிறைந்த நன்னாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாற்றி வழிபடுவதால் அனுமனின் அருள் கிடைக்கும்.
அதோடு அனுமன் ஜெயந்தி அன்று இடைவிடாமல் ராம நாமம் உச்சரிக்க அவர்களுக்கு ராமனின் அருளால் காரிய வெற்றி மற்றும் வாழ்க்கையில் புண்ணியம் சேரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |