கை தவறி குங்குமம் கீழே கொட்டினால் அபசகுணமா??

By Sakthi Raj Nov 23, 2024 07:39 AM GMT
Report

நம்முடைய வீட்டில் பூஜை பொருட்களை மிகவும் பத்திரமாக கையாள்வோம்.இருந்தாலும் சமயங்களில் அந்த பொருட்கள் கை தவறி கீழே விழும் வாய்ப்புகள் உள்ளது.அதிலும் வீட்டின் மிக முக்கிய பொருளான குங்குமம் கீழே விழுந்தால் பலரும் அபசகுணம் என்று சொல்லுவது உண்டு.

ஏன் வீட்டு பெண்களுக்கு மிகுந்த பயமும் பதட்டமும் உண்டாகி விடும்.அப்படியாக வீட்டில் குங்குமம் கை தவறி கீழே கொட்டினால் என்ன செய்வது?அந்த சம்பவம் உணர்த்த வருவது என்னவென்று பார்ப்போம். வீட்டில் பொருட்கள் கை தவறுவது என்பது இயல்பான விஷயம் தான்.

கை தவறி குங்குமம் கீழே கொட்டினால் அபசகுணமா?? | Home Parigarangal Tips

ஆனால் வீட்டில் இருக்கும் முக்கியமான பொருட்கள் கை தவறி விழும் பொழுது அவை எதோ ஒரு அறிகுறி உணர்த்துவதற்கு மட்டுமே அபசகுணம் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.அப்படியாக குங்குமம் என்பது வீட்டில் மங்களகரமான விஷயம்.அவை கை தவறி விழும் பொழுது நம்மை அறியாமல் பயம் உருவாகும்.

இறை வழிபாட்டின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய 15 விஷயங்கள்

இறை வழிபாட்டின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய 15 விஷயங்கள்

வீட்டில் ஏதேனும் எதிர் பாராத நிகழ்வு உண்டாகுமோ என்று.ஆனால் அவை வீட்டில் நடக்க இருக்கும் சம்பவத்தை தடுக்கும் நிகழ்வாகத்தான் நடந்து இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அப்படி குங்குமம் கீழே கொட்டினால் பதட்டம் அடையாமல் அதை சுத்தம் செய்து ஒரு காகிதத்தில் வைத்து விடவேண்டும்.

ஒரு போதும் குப்பையில் போடுவதோ இல்லை மீண்டும் அதை உபயோகிப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது.ஆக குங்குமம் கொட்டினால் வீட்டில் அனைவரும் அமைதி காத்து வெளியில் செல்லும் பொழுதும் உடல் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US