ஜ்யேஷ்ட மாதத்தில் கொடிக்கட்டி பிறக்கப்போகும் 2 ராசிகள் யார் தெரியுமா?
ஜ்யேஸ்தா என்பது இந்து நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும், இது அதிக கோடையுடன் தொடர்புடையது. இந்த மாதத்தில் தான் பல கிரகங்களும் தங்களின் இடங்களை மாற்றி கொள்கிறார்கள்.
அப்படியாக குரு, சூரியன், ராகு மற்றும் கேது ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் ஒரு வித தாக்கத்தை உண்டு செய்யும். அதே நேரத்தில், சந்திர பகவானின் ராசி மாற்றத்தால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய அதிர்ஷ்டத்தை சந்திப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஜ்யேஷ்ட மாதம் தொடக்கத்திலே நற்செய்தியை கேட்கக்கூடும். இவர்கள் நீண்ட நாட்களாக சந்தித்த கெட்ட காலம் அவர்களை விட்டு விலகுகிறது. பல நாட்களாக கைக்கு வராத பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் சரி ஆகும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் காலம் ஆகும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்தி ஒன்று உங்களை தேடி வரும்.
மகரம்:
ஜ்யேஷ்ட மாதத்தில், மகர ராசிக்காரர்களுக்கு அவர்கள் எதிர்காலம் பற்றிய தெளிவை கொடுக்கும். நீங்கள் உடல் வலிமையும், மன வலிமையும் பெரும் காலம் ஆகும். சகோதரன் சகோதரி இடையே ஏற்பட்ட விரிசல் சரி ஆகும். உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். குழந்தைகள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |