ஆன்மீகம்: மனிதனுக்கு இன்றளவும் விடை தெரியாத 6 கேள்விகள்
இந்த உலகம் கர்ம வினையின் அடிப்படையிலே இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று அனைவரும் அறிவோம். அப்படியாக, பலருக்கும் பல சூழலில் சில விஷயங்களுக்கு விடையே தெரியாமல் போயிவிடுகிறது. அதில் குறிப்பாக இந்த 6 கேள்விகளுக்கு பலருக்கும் பதில் தெரிவதே இல்லை. அதைப் பற்றி பார்ப்போம்.
1.ஒருவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இருக்காது, ஆனால் அவர் அகால மரணம் அடைவதை பார்க்கின்றோம். ஏன்?
2. யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று நினைப்பவர்களே அதிக அளவில் காயங்களை சந்திக்கிறார்கள். ஏன்?
3. உறவுகளும் நண்பர்களும் அதிகம் வேண்டும் என்று நினைப்பவரை தனிமை படுத்துவது. ஏன்?
4. பிறர் துன்பம் தாளாமல் இளகிய மனதுடன் பிறருக்கு உதவி செய்பவர் அதிகம் ஏமாற்றப்படுகிறார். ஏன்?
5. ஆடம்பர செலவுகளே செய்யாதவர்கள் நலிவுற்று இருப்பது. ஏன்?
6. அகம்பாவமும் ஆணவமும் அலட்சிய மனோபாவமும் கொண்ட சிலர் செல்வந்தராகவும், சமுதாயத்தில் மதிக்கப்படுபவராகவும் இருப்பது. ஏன்?
இவ்வாறு அடிக்கடி கேள்விகள் எழுவது உண்டு. இதற்கு ஒரே விடை நம் ப்ராரப்த கர்மா என்று புத்த மதம் கூறுகிறது. இது எல்லோருக்கும் பொருந்தும். இந்த உலகம் பல கேள்விகளால் நிரப்பப்பட்டாலும் ஒரே பதிலை கொண்டு அது நிறைவடைகிறது. அது தான் இறைவன்.
நடப்பவை எல்லாம் இறைவன் கைகளில். ஆக, எப்பொழுது வேண்டுமானலும் இறப்பு என்னும் அழைப்பு வரலாம். வரும் அழைப்பை யாரும் துண்டிக்க முடியாது. அதேப்போல், நொடிப்பொழுதில் வாழ்க்கை மாறலாம். நிற்கதியாக நிற்கலாம், ஆனால் ஒரு பொழுதும் அவனை சரண் அடையாமல் மட்டும் இருக்கக்கூடாது.
ஆகையால், மாயையில் இருந்து விடுபட இறைவனை சரணாகதி அடைவதே ஒரே வழி. தான் செய்த புண்ணியத்தின் பலன் பெறவில்லை என்றாலும், நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவத்தின் கர்மவினைகளை கழித்து, எந்த சூழலிலும் தான் மீண்டும் ஒரு பாவம் செய்யாமல் இருக்க பிறவா வரம் கேட்க வேண்டும்.
இவ்வாறு எவன் ஒருவன் இறைவனை முழு சரணாகதி அடைகின்றார்களோ அவர்களுக்கு வருகின்ற துன்பம் அனைத்தும் ஒரு துன்பமே இல்லை. அவர்கள் தான் கர்மவினையால் கழிக்க வேண்டிய கடன் என்று நினைத்து நடப்பவை அனைத்தையும் இறைவனிடம் விட்டு விடுகிறார்கள்.
சர்வம் கிருஷ்ணார்பணம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







