விருந்தாளிகளுக்கு முதலில் தண்ணீர் கொடுப்பதற்கான காரணம் தெரியமா?
நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் வீட்டிற்கு எந்த விருந்தினர் வந்தாலும் முதலில் தண்ணீர் கொடுப்பது வழக்கம்.அவ்வாறு தண்ணீர் கொடுத்த பிறகே அவர்கள் பேச வந்த காரியத்தை பற்றி பேச தொடங்குவோம்.
மேலும் இந்த கலாசாரத்தை நாம் பலரும் பல வகையில் புரிந்து இருப்பது உண்டு.அதாவது வெகு தொலைவில் இருந்து வந்திருக்கலாம் அவர்கள் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் கொடுக்கின்றோம் என்று சிலர் நினைப்பது உண்டு.
சிலர் வீட்டிற்கு வந்தவர்களுக்கு எதுவும் சாப்பிட கொடுக்க முடியவில்லை என்றாலும் தண்ணீர் மட்டும் ஆவது கொடுக்க வேண்டும் என்று எண்ணி கொடுப்பது உண்டு.அப்படியாக உண்மையில் நாம் விருந்தாளிகளுக்கு தண்ணீர் கொடுப்பதற்கான ஆன்மீக காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
நம் வீட்டிற்கு வந்த மனிதர் எந்த மனநிலையோடு வந்திருப்பார் என்று தெரியாது.எதிர்மறை எண்ணங்கள் கொண்டு வந்திருக்கலாம் இல்லை ஏதேனும் கோபத்தோடு வந்திருக்கலாம்.அப்படியாக நாம் முதலில் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கும் பொழுது அந்த தண்ணீர் அவர்களின் மன நிலையை மாற்றி அவர்களை சாந்த படுத்துகிறது.
பொதுவாக தண்ணீருக்கு மனிதனின் மனநிலையை மா ற்றும் சக்தி உண்டு.நாம் நன்றாக கவனித்து இருந்தால் யாராவது அதீத சண்டையில் கோபம் கொண்டோ அல்லது அழுது கொண்டு இருக்கும் பொழுது அவர்களுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் அவர்கள் வேகம் சற்று குறையும்.
இவ்வளவு ஆற்றல் நிறைந்த தண்ணீர் ஒருவருக்கு கொடுக்கும் பொழுது அவர்கள் மனநிலை மாறி அந்த சூழல் அமைதியான முறையில் அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |