இன்றைய ராசி பலன்(20-07-2025)
மேஷம்:
நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருளை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகி செல்லும். மதியம் மேல் நண்பர்களுடன் நேரம் செலவு செய்வீர்கள்.
ரிஷபம்:
உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களிடம் வீண் வாக்கு வாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். முடிந்த வரை கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்பட்டால் நன்மை தரும்.
மிதுனம்:
உறவினர்கள் இடையே ஏற்பட்ட சங்கடம் விலகும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உங்கள் கைக்கு வரவேண்டிய பணம் வரும்.
கடகம்:
நண்பர்கள் வழியாக நன்மை பெறுவீர்கள். பிள்ளைகள் உடல் நிலையில் முன்னேற்றம் பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தங்களை பற்றி புரிந்துகொள்ளும் நாள்.
சிம்மம்:
இன்று கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு தாய் வழி உறவால் சில சிக்கலை சந்திக்க நேரிடும். உணவு விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. போட்டிகளில் வெற்றி காணும் நாள்.
கன்னி:
இன்று முடிந்த வரை உங்கள் சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
துலாம்:
மனதில் உள்ள குழப்பங்கள் விலகி செல்லும். உங்கள் பேச்சுக்கு பெற்றோர்கள் மதிப்பு கொடுப்பார்கள். உடன் பிறந்தவர்களால் உண்டான பிரச்சனை விலகி செல்லும்.
விருச்சிகம்:
உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வருவாய் அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.
தனுசு:
உங்கள் குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
மகரம்:
இன்று தேவை இல்லாத அலைச்சலை சந்திப்பீர்கள். பிறருக்கு உதவி செய்து மகிழும் நாள். இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உங்களை பற்றி குடும்பத்தினர் புரிந்துக் கொள்ளும் நாள்.
கும்பம்:
முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும்.
மீனம்:
இன்று வியாபாரத்தில் நீங்கள் நினைத்த வருமானம் மனம் மகிழ்ச்சியை கொடுக்கும். பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நீண்ட நாட்களாக சந்தித்த நெருக்கடிகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







