கருட புராணம்: வாழ்க்கையில் தவறியும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள்
இந்து மதத்தில் கருட புராணம் என்பது மனிதர்களுக்கு தேவையான அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கக்கூடிய ஒரு அற்புதமான நூலாகும். இந்த கருட புராணம் என்பது விஷ்ணு பகவானுக்கும் கருடருக்கும் நடக்கக்கூடிய ஒரு உரையாடலாகும். அப்படியாக கருட புராணத்தில் நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
அதில் குறிப்பாக ஒருவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ குறிப்பிட்ட இந்த நான்கு விஷயங்களை தொடங்கிவிட்டு பிறகு அதை பாதியில் விட்டுவிடக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறு அவர்கள் பாதியில் விடும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய துன்ப நிலைக்கு செல்வார்களாம். அதை பற்றி பார்ப்போம்.

1. வாழ்க்கையில் பொருளாதார கஷ்டம் என்பது கால சூழ்நிலையால் பணக்காரர்கள் முதல் எல்லோரும் சந்திக்கக்கூடிய ஒரு ஒன்றாக இருக்கிறது. அப்படியாக ஒருவரிடம் நாம் கடன் வாங்கி விட்டோம் என்றால் அதை முடிந்த அளவு வெகு விரைவில் அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். கடன் அன்பை முறிக்கும் என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒருவரிடம் வாங்கிய கடனை நாம் திருப்பி செலுத்துவதற்கு காலதாமதம் ஆகும் பொழுது அந்த உறவு விரிசல் அடைவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாகவும் அதோடு கடனை கொடுக்காமல் நாம் ஒரு வேலை மரணிக்க நேர்ந்தால் கடன் கொடுத்தவர்களுடைய மனமானது மிகவும் துன்பப்படும் என்றும் அவர்களுடைய மன வேதனை நமக்கு பாவத்தை கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.
2. மனிதர்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் கட்டாயமாக உடல்நிலை குறைபாடுகளை சந்தித்தாக வேண்டும். அவ்வாறு உடல் நிலையில் ஏதேனும் ஆரோக்கிய குறைபாடுகள் இருந்தால் அதை நாம் சரி செய்வதற்கான முழு ஈடுபாடுகளிலும் ஈடுபட வேண்டும். அதை பாதியில் விடும் பொழுது நம் ஆரோக்கியமானது மிகவும் மோசமான நிலைக்கு சென்று உயிருக்கு கூட ஆபத்து நேரலாம்.

3. ஐம்பூதங்களில் நெருப்பு என்பது மிக எளிதாக பற்றக் கூடியது. ஒரு இடத்தில் நெருப்பு பற்றி விட்டது என்றால் அதை உடனடியாக அணைத்து விட வேண்டும். அதேபோல் தான் ஒருவரை பற்றிய வதந்திகள் தேவை இல்லாமல் ஒருவரால் பேசப்படுகிறது என்றால் அது வதந்திகள் என்று தெரியும் பொழுதே நாம் அதை நிறுத்தி விட வேண்டும். இல்லை என்றால் அதுவும் நெருப்பை போல் பரவி விடும்.
4. ஒருவரிடம் பகைமை உண்டாகிறது என்றால் அது எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமோ அதை சரி செய்து விட வேண்டும். அல்லாமல் ஒருவர் மனதில் பகை எனும் தீ பரவிக் கொண்டே இருக்க அது பிற்காலங்களில் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து அது மிகப்பெரிய அழிவை உண்டாக்க கூடும்.
ஆக இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு சாதாரண விஷயமாக தெரிந்தாலும் இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய விளைவுகள் என்று பார்த்தால் அது ஒரு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அதனால் நாம் செய்யும் செயலை சரியாக முறையாக செய்து விடுவது என்பது நமக்கும் நம்முடைய தலைமுறையினருக்கும் நல்ல முடிவை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |