சிவன் கோயில் கட்டும் அதிர்ஷ்டம் உடைய ராசிகள் யார் தெரியுமா?
சிவபெருமான் அழித்தல் கடவுள் என்று சொல்லுவார்கள். ஆனால், அவரை வழிபாடு செய்யும் அவரின் பக்தருக்கு தான் தெரியும் சிவபெருமான் எத்தனை கருணை உள்ளம் கொண்டவர் என்றும், அன்பு மிகுந்தவர் என்றும்.
அப்படியாக, சிவ பக்தர்கள் எல்லோருக்கும் தானும் எம்பெருமானுக்கு ஒரு கோயில் கட்டி அவருக்கு பூஜை செய்து பார்த்து மனம் குளிர்ந்திட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால், அந்த பிராப்தம் ஈசன் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும், இருந்தாலும் ஜோதிட ரீதியாக எந்த ராசிகளுக்கு அவர்கள் சிவபெருமானுக்கு கோயில் கட்டி திருப்பணிகள் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் தான் ரோகிணி நட்சத்திர உள்ளது. இந்த நட்சத்திரம் கிருஷ்ணருக்கு உடையது என்பதால் இவர்களுக்கு இயற்கையாவே கிருஷ்ணருடைய அருள் இருக்கும். இருந்தாலும் சிலர் சிவபெருமானின் மீது அதிக பக்தியும் ஈடுபாடும் கொண்டு இருப்பார்கள். இவர்களுடைய அதீத ஈடுபாடும் தொண்டு செய்யும் பணியும் இவர்களுக்கு கோயில் கட்ட துணையாக அமைந்து வாய்ப்புகள் உருவாகிறது.
கடகம்:
இவர்களுக்கு எப்பொழுதும் சிவனின் ஆசீர்வாதம் இருக்கும். இவர்கள் இயற்கையாகவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவார்கள். இவர்களுக்கு மனதில் எப்பொழுதும் சிவத்தொண்டு செய்யவேண்டும் என்ற எண்ணமும் கோயில் கட்டி திருப்பணிகள் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். இவர்கள் எடுக்கும் முயற்சிகளும் சிவன் அருளால் நிறைவேறும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு உள்ளுணர்வு அதிகம் உண்டு. இவர்களுக்கு இயற்கையாக எதிர்காலத்தில் நடக்க இருப்பதை கணிக்கும் திறன் இருக்கும். அப்படியாக, இவர்கள் கர்மவினைகளை அழிக்கும் எம்பெருமான் மீது அதீத பக்தி செலுத்துவார்கள். இவர்களுடைய வலிமையான பக்தி தவத்தால் இவர்களுக்கு சிவன் கோயில் கட்ட முயற்சி செய்யும் பொழுது அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







