போட்டி என்று வந்து விட்டால் இந்த ராசியினரை கையில் பிடிக்க முடியாது- எந்த ராசிகள் தெரியுமா?
மனிதன் வாழ்வில் கட்டாயம் சவால்களும் போட்டிகளுமே சிறந்த சுவாரசியத்தை கொடுக்கிறது. இவை இல்லை என்றால் வாழ்க்கையில் பெரிய அளவில் பிடிப்பு இருக்காது. இருந்தாலும் சிலர் இதை எதிர் கொள்ள மிகுந்த பயமும் அச்சமும் கொள்வார்கள்.
ஆனால், ஒரு சிலருக்கு போட்டி சவால்கள் என்றால் விரும்பி முன் வந்து கலந்துக்கொள்வார்கள். அந்த வகையில் எந்த ராசியினர் வாழ்க்கையில் அதிக போட்டியும் சவால்களையும் சந்திக்க விருப்பம் உடையவர்கள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு எப்பொழுதும் போட்டியும் சவால்களும் மிகவும் பிடித்தமானவை. இவர்கள் இந்த இரண்டும் இல்லை என்றால் வாழ்க்கை மிகவும் சுவாரசியம் அற்றது என்று நம்புகிறார்கள். அதோடு, இவர்கள் சந்திக்கும் சவால்கள் எப்பொழுதும் இவர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதாக நம்புகிறார்கள்.
சிம்மம்:
போட்டி மற்றும் சவால்கள் என்று வந்து விட்டால் அங்கு கட்டாயம் சிம்ம ராசி இடம் பெறாமல் இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு எப்பொழுதும் போராடி ஜெயிப்பது என்பது பிடித்தமான ஒன்று. அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவர்கள் பயன் படுத்தி வெற்றி பெற வழியை தேடுவார்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு வாழ்க்கையில் வெற்றி பெருகின்றமோ இல்லையோ கட்டாயம் நாம் சில பாடங்களை, அனுபவங்களை பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதனால், இவர்கள் நிறைய போட்டிகளையும் சவால்களையும் சந்திக்க எப்பொழுதும் தயாராகவே இருக்கிறார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு தான் இருக்கும் இடத்தில் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால், இவர்கள் சவால்களை கடும் முயற்சிகள் கொண்டு ஜெயித்து விடுவார்கள். இவர்களுக்கு போட்டியும் சவால்களும் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது என்று தீர்க்கமாக நம்பக்கூடியவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







