குருபகவானை எப்படி நின்று வழிபடவேண்டும் தெரியுமா?

Guru Peyarchi Guru Bhagavan
By Sakthi Raj May 01, 2024 06:30 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள்.பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும்.

சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.

குருபகவானை எப்படி நின்று வழிபடவேண்டும் தெரியுமா? | Gurubagavan Gurupeyarchi Vazhipadu Kovil Parigaram

அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.

குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:

குரு கொடுக்கும் யோகங்கள்

குரு கொடுக்கும் யோகங்கள்


"வானவர்க் கரசே!
வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!
நிலையாய் தந்திட நேரினில் வருக!"
"நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்! வல்லவன் குருவே!
வணங்கினோம் அருள்வாய்! 

என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்".

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US