ராமாயணம் நமக்கு உணர்த்துவது யாவை?

Ayodhya Ram Mandir
By Sakthi Raj May 05, 2024 08:00 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

ராமாயணம் நமக்கு நவ பக்திகளை உணர்த்துகிறது. அதில் வரும் ஒவ்வொரு சம்பவங்களும் ஒவ்வொரு வகையில் ஒரு பக்திக்கு உதாரணமாகத் திகழ்கிறது.

நவ பத்திகள் என்பது கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், வந்தனம், அர்ச்சனம், ஸ்ரவணம், சக்யம், தாஸ்யம், ஆத்ம நிவேதனம் ஆகியவை நவ பக்தி எனப்படுகிறது.

ராமாயணம் நமக்கு உணர்த்துவது யாவை? | Puranam Ramar Ramayanam Perumal Sitai Lakshamanan

கீர்த்தனம் என்பது ஸ்ரீராமனின் மகிமைகளை பாடி மகிழ்ந்து பக்தி செய்தல் ஆகும். வால்மீகி முனிவர் ஸ்ரீராமரின் வாழ்க்கையை காவியமாய் தந்தது கீர்த்தனம் எனப்படும்.

ஸ்மரணம் என்பது ஸ்ரீ ராமனையே நினைவில் நிறுத்தி பக்தி செய்தல். ராமரையே சதா மனதில் நிறுத்தி அசோகவனத்தில் அமைதியாக தவம் இருந்து பக்தி செய்த சீதா பிராட்டி ஸ்மரணத்திற்கு ஒரு உதாரணம்.

பாத சேவனம் என்பது ஸ்ரீராமரின் பாதங்களை சேவித்து பக்தி செய்தது. அதற்கு உதாரணமாக ஸ்ரீராமரின் பாதுகைகளையே துணையாகக் கொண்டு ஆட்சி புரிந்த பரதன் ஆகும்.

வந்தனம் என்பது ஸ்ரீராமரை அடிபணிந்து வணங்குவது. அதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் விபீஷணன்.

ராமாயணம் நமக்கு உணர்த்துவது யாவை? | Puranam Ramar Ramayanam Perumal Sitai Lakshamanan

அர்ச்சனம் என்பது ஸ்ரீராமரை வழிபடுதல். அதற்கு ஒரு உதாரணமாக திகழ்ந்தவர் பல ஆண்டுகளாக ஸ்ரீராமருக்காக காத்திருந்த சபரி என்னும் முதிய பெண்மணி.

ஸ்ரவணம் என்பது ராம நாமத்தையும் அவரது மகிமையும் கேட்பது. ராம நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் வீற்றிருக்கும் ஆஞ்சநேய பிரபுவை உணர்த்துவதே ஸ்ரவணம்.

சக்யம் என்பது ஸ்ரீராமனுடன் நட்பை வளர்த்துக் கொண்டு பக்தி ஏற்படுத்திக் கொள்வது. ஸ்ரீ ராமனிடம் நட்புக் கொண்டு அவருக்கு சேது அணைக்கட்ட யுத்தத்தில் பக்தி பூர்வமாய் உடன் துணை புரிந்த பல்லாயிரம் வானரப் படைகள் சக்யத்துக்கு உதாரணமாக திகழ்கிறார்கள்.

தாஸ்யம் ஸ்ரீ ராமரின் அடியவரை சேவித்தல். ஸ்ரீ ராமனுக்கே தொண்டு புரிந்து ராமதாசனை கடைசி வரையும் பக்தி செய்த லட்சுமணனை குறிக்கும். அதுவே சரியான உதாரணமாக அமைகிறது.

ஆத்ம நிவேதனம் ஸ்ரீ ராமனிடம் தன்னையே முழுமையாக ஒப்படைப்பதே ஆத்ம நிவேதனம். அதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் ஜடாயு.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US