தமிழக கோயில்களும் அதிசயங்களும்

Parigarangal
By Sakthi Raj May 06, 2024 09:30 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ராமானுஜரின் உடல் ஆயிரம் வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூர் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும் தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர் காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவம் இருக்கிறது.

தமிழக கோயில்களும் அதிசயங்களும் | Temple Aanmegam Athisayangal Srirangam Tirunelveli

தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசை படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்திய ஒலி கேட்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றிஒன்று சாமி மலை ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல்விளக்கில் இளநீர் விட்டு தீபம் ஏற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

தினம் வீட்டில் நாம் முதலில் எந்த உணவை சமைக்க வேண்டும்?

தினம் வீட்டில் நாம் முதலில் எந்த உணவை சமைக்க வேண்டும்?


சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில் தினமும் சூரிய ஒளி மூலவர் மீது படுகிறது காலை மதியம் மாலை என மூன்று முறை சூரிய ஒளி விழுகிறது.. சுசீந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காது வழியாக வெளியே வருகிறது.

தமிழக கோயில்களும் அதிசயங்களும் | Temple Aanmegam Athisayangal Srirangam Tirunelveli

திருப்பூரில் உள்ள குண்டம் வடுகநாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது குழந்தை இந்த மாதத்தில் இந்த இந்த வடிவத்தில் இந்த விதமான பொசிஷன் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே கல்லின் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள்.

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணத்திற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும்.

அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. ஈரோடு காங்கேயத்துக்கு அருகில் மடவிளாகம் சிவன் கோவில் குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்பானை நிறைய வீபூதி தோன்றுகிறது.

சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பார்க்க முடியும் ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீ ராமரை பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

தாரமங்கலம் பெருமாள் கோவில் சென்னை முகப்பேரில் கரி வரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்




+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US