தினம் வீட்டில் நாம் முதலில் எந்த உணவை சமைக்க வேண்டும்?
நம் வீட்டில் தினமும் காலையில் சமைப்பது உண்டு அப்படியாக ஆன்மீக ரீதியாக நம் வீட்டில் முதலில் எந்த உணவை சமைக்க வேண்டும் என்று பார்ப்போம்.
உதாரணமாக காரைக்கால் அம்மையார் பற்றி நம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.
63 நாயன்மார்களில் பெண் நாயனார் ஆவார்.மிகுந்த சிவ பக்தர். அப்பொழுது ஒரு நாள் அந்த அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு காரைக்கால் அம்மையார் வீட்டிற்கு சிவனடியாராக உணவு வேண்டி செல்கிறார்.
அப்பொழுது அம்மையார் வீட்டில் சாதம் மட்டும் வடித்து வைத்திருந்த வேளையில் தன் கணவன் கொடுத்த மாம்பழம் இருந்தது சிவனடியார் வந்து உணவு கேட்க காரைக்கால் அம்மையார் உணவு இல்லை என்று சொல்லாமல் சாதத்துடன் தயிர் கலந்து மாம்பழம் படைத்து சிவனடியாருக்கு உணவு கொடுத்து அனுப்பினார்
இதுவே குழம்பு முதலில் சமைத்து வைத்திருந்தால் சிவன் அடியார் இல்லை யார் வந்து உணவு கேட்டு இருந்தாலும் இல்லை என்று சொல்ல நேரிட்டிருக்கும். ஆக ஒருவர் வீட்டில் முதலில் சமைக்க வேண்டியது சாதம்.
அதாவது நம் வீட்டிற்கு யார் வந்தாலும் அதை வைத்து நாம் சமாளித்து கொள்ளலாம் .
மேலும் நம் வீட்டிற்கு திடீர் விருந்தினர்களோ அல்லது உணவு வேண்டி யாரேனும் வந்தாலும் உணவு இல்லை என்று சொல்லாத அளவிற்கு நம் வீட்டில் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கும் உதாரணமாக காரைக்கால் அம்மையார் அவர்களுடைய வரலாறு அமைந்திருக்கிறது.
ஆக நம் ஆன்மீக ரீதியாகவும் வீட்டில் முதலில் சாதம் சமைத்த பிறகு பிற உணவுகளை சமைக்க வேண்டும் என்பது இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |