மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகை புனித நீரால் அபிஷேகம்

Madurai Madurai Meenakshi Temple
By Yashini Jul 01, 2024 12:32 PM GMT
Yashini

Yashini

Report

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் காலை 5 மணிக்கு திறந்த பிறகு 6.30 மணிக்கு காலசந்தி பூஜையும், விளா பூஜையும் நடைபெறும்.

இதற்காக தினமும் வைகை ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்வது வழக்கம்.

வைகை ஆற்றில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில புனித நீர் எடுக்கப்படும். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகை புனித நீரால் அபிஷேகம் | Vaigai Holy Water At Meenakshi Amman Temple

பின்னர் அந்த நீரை பரிஜாதகர் சுமந்தும், அவர்களுக்கு முன்னால் யானை, டங்கா மாடு, நாதஸ்வரம் இசைத்தபடி கோவிலுக்கு வருவார்கள்.

அங்கு காலசந்தி பூஜையின் போது அம்மன் மற்றும் சுவாமியின் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம்

இவ்வாறு ஆண்டாண்டு காலமாக நடந்த அந்த அபிஷேகம் கொரோனா காலகட்டத்தில் தடைபட்டது.

அதனை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகை புனித நீரால் அபிஷேகம் | Vaigai Holy Water At Meenakshi Amman Temple

ஆனால் காலப்போக்கில் புனித நீர் எடுக்கும் கிணற்றில் சகதி மற்றும் தேங்கியிருந்த நீரால் அசுத்தமாக காணப்பட்டதால் கோவில் நிர்வாகம் சீரமைத்து சுத்தம் செய்தது.

தற்போது வைகை ஆற்றில் உள்ள கிணற்றில் மீண்டும் தண்ணீர் ஊற தொடங்கியது.

அந்தவகையில், இன்று காலை 6 மணிக்கு புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வைகை ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் எடுத்து வரப்பட்டு அபிஷேகம்  செய்யப்பட்டது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US