திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4ஆம் திகதி அதிகாலை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
5ஆம் திகதி காலை சின்ன ஷேச வாகனம், இரவு அம்ச வாகனம் உற்சவம் நடைபெறுகிறது.
6ஆம் திகதி சிம்ம வாகனம், இரவு முத்து பந்தல் வாகனம் உற்சவம் நடைபெறுகிறது.
7ஆம் திகதி கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடைபெறுகிறது.
8ஆம் திகதி காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளுகிறார். இரவு கருட சேவை நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
9ஆம் திகதி காலை 6 மணிக்கு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அனுமந்த வாகனத்திலும், இரவு கஜ வாகனத்திலும் உற்சவம் நடைபெறுகிறது.
10ஆம் திகதி சூரிய பிரபை வாகனமும், இரவு சந்திர பிரபை வாகன உற்சவம் நடைபெற உள்ளது.
11ஆம் திகதி தேரோட்டம் நடக்கிறது. இரவு குதிரை வாகன சேவை நடைபெறுகிறது.
12ஆம் திகதி புஷ்ப பல்லுக்கு வாகன சேவை நடைபெறுகிறது. இதையடுத்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
மேலும், பிரமோற்சவ விழா நாட்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |