தினமும் செய்யும் இந்த 5 விஷயங்கள் அதிர்ஷ்டத்தை பெற்று கொடுக்குமாம்
நம்முடைய வாழ்க்கையில் தினமும் செய்யக்கூடிய ஒரு சிறிய விஷயங்கள் கூட நமக்கு ஒரு மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்கிறது. உண்மையில் அன்றாட வாழ்க்கைக்கு பணம் மிகவும் அவசியமாக இருந்தாலும் இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் சேமித்து வைத்திருக்கக்கூடிய புண்ணியமும் ஆன்மாவை மேன்மை படுத்திருக்க கூடிய அந்த ஆற்றலும் தான் நம்மை எப்பொழுதும் வழிநடத்தி துன்பத்தில் இருந்து தாங்கி நிற்கக் கூடியதாக இருக்கும்.
அதனால் பணம் தேவை என்றாலும் நம்முடைய குண நலன்களை எப்பொழுதும் சுத்தமாகவும் தர்மம் நிறைந்த சிந்தனையோடு இருப்பது அவசியமாக இருக்கிறது. அப்பொழுதுதான் பூவுலகில் இருந்து மேலோகம் சென்றாலும் நம்முடைய ஆன்மா அமைதியாக இருக்க முடியும்.
அந்த வகைகளில் நம்முடைய வீடுகளில் தினமும் செய்யக்கூடிய ஒரு ஐந்து விஷயங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மாற்றக்கூடிய நிலையை கொடுக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

1. முடிந்தவரை தினமும் காலையில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி சூரிய பகவானை பிரார்த்தனை செய்து பழக வேண்டும். இந்த உலகம் ஒவ்வொரு நாளும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய சாட்சியாக சூரிய பகவான் இருக்கிறார். மேலும், ஜோதிடத்தில் தலைமை கிரகமாக சூரியன் இருக்கிறார். ஆதலால், சூரிய பகவான் உடைய அருளும் ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவர் தலைசிறந்து விளங்க முடியும்.
2. தினமும் வீடுகளில் விளக்கேற்ற கூடிய நடைமுறையை கொண்டு வர வேண்டும். நாம் விளக்கேற்றும் பொழுது அந்த தீபச்சுடரை பார்க்க நேருகிறது. அந்த தீபமானது நம்முடைய ஆன்மாவை சுத்திகரிக்ககூடிய தன்மையை பெற்றிருக்கிறது.
அதனால் தீபம் ஏற்றி நம் ஒரு ஐந்து நிமிடம் இறைவன் முன்னாடி அமர்ந்து தியானம் செய்து நம்முடைய வேண்டுதலை வைத்தும் இறைவனுடைய மந்திரங்களை பாராணம் செய்யும் பொழுதும் நம்முடைய மனமானது நேர்மறை ஆற்றலை பெறுகிறது.

3. நாம் ஒருவருக்கு உணவு வழங்கி பழக வேண்டும். அதாவது விலங்குகளாக இருக்கட்டும் ஏழைகளாக இருக்கட்டும் அவர்கள் பசியை ஆற்றக்கூடிய உணவுகளை கொடுக்கும் பொழுது நமக்கு இரக்க குணம் அதிகமாக ஆகிறது.
ஒரு மனிதனுக்கு நல்ல பண்புகள் குணங்கள் இவை எல்லாம் இரக்கம் என்கின்ற ஒரு அடிப்படையில் இருந்துதான் வளர்க்கிறது. ஆக இரக்க குணம் அதிகமாகும் பொழுது அதிகமாக உயிர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம். அதனால் நம்முடைய கோபம் குறைந்து பாவ செயல்கள் செய்வதில் இருந்து விடுதலை அடைகின்றோம்.
4. நம்முடைய குடும்பத்தினருடைய முன்னோர்களை நாம் மறக்கக்கூடாது. அவர்களுக்கு நன்றியும் ஆசிர்வாதமும் செலுத்த வேண்டும். அவ்வாறு முன்னோர்களுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து அவர்களை வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் நமக்கு கர்ம வினை குறையும்.
5. முடிந்தவர்கள் தினமும் ஒரு ஆன்மீகப் புத்தகத்தை படிப்பது சிறந்தது. பகவான் அருளிய பகவத் கீதையை படிக்கலாம் அல்லது சிவபுராணம் படிக்கலாம் கந்தபுராணம் படிக்கலாம். இவ்வாறு இறைவனுடைய புத்தகங்களையும் அவர்களுடைய புராணங்களையும் படிப்பது நமக்கு ஏற்படுகின்ற தோஷத்தை குறைத்து தீய பலன்களின் தாக்கத்தையும் குறைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |