குரு பகவானால் பிறவியிலே கோடீஸ்வர யோகம் பெற்ற ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Mar 19, 2026 07:02 AM GMT
Report

 ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். குருவின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் ஞானத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் குரு பகவான் அருள் ஒருவருக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் மேற்கண்ட அத்தனை செல்வங்களையும் குறைவின்றி பெற முடியும்.

அந்த வகையில் குரு பகவான் இடமாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும். அதனால் தான் "குரு பார்த்தால் கோடி நன்மை" என்று சொல்கிறார். அந்த வகையில் குரு பகவானின் ஆசிர்வாதத்தை பிறவியிலே பெற்ற ராசிகள் யார் என்று பார்ப்போம்.

குரு பகவானால் பிறவியிலே கோடீஸ்வர யோகம் பெற்ற ராசிகள் யார் தெரியுமா? | Favourite Zodiac Sign For Guru Bagavan

நடக்க போகும் ராகு பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம்? உங்கள் ராசி உள்ளதா?

நடக்க போகும் ராகு பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம்? உங்கள் ராசி உள்ளதா?

கடகம்:

ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் கடக ராசியில் தான் உச்சம் அடைகிறார். அதனால் கடக ராசியினர் குரு பகவானுடைய முழு அருளையும் பெறுகிறார்கள். கடக ராசியினர் இயல்பிலே மிகவும் பொறுமை மற்றும் தலைமைத்துவ பண்பில் சிறந்து விளங்க கூடியவர்கள். அதோடு வாழ்க்கையில் எப்பேர்பட்ட இக்கட்டான நிலை வந்தாலும் இவர்கள் குரு பகவானால் காப்பாற்றப்படுவார்கள்.

விருச்சிகம்:

குரு பகவானும் செவ்வாயும் நட்பு கிரகம் என்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் குரு பகவானின் முழு அருள் எப்பொழுதும் இருக்கும். இவர்கள் விடா முயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் ஒரு செயலை செய்து முடிக்க கூடியவர்களாக இருப்பார்கள், குரு பகவானின் ஆசையால் தொழிலில் எப்பொழுதும் சிறந்து விளங்க கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

2026: தனுசு ராசிக்கு ராஜயோகம் எப்பொழுது தொடங்கும் தெரியுமா?

2026: தனுசு ராசிக்கு ராஜயோகம் எப்பொழுது தொடங்கும் தெரியுமா?

தனுசு:

குரு பகவானின் சொந்த வீடான தனுசு ராசிக்கு எப்பொழுதுமே குரு பகவானுடைய அருள் இருக்கும். தனுசு ராசியினர் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் ஒரு நல்ல அதிர்வலைகளை பார்க்கலாம். மேலும் தனுசு ராசியில் பிறந்தவர்களின் குடும்பத்தில் எப்பொழுதும் ஒரு ஆசிரியர் பணியில் இருக்கக் கூடியவர்கள் இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பெயர் சொல்லும் படி வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US