தலையெழுத்தையே மாற்றும் முருகப்பெருமானின் மாபெரும் கவச மந்திரம்

By Sakthi Raj Mar 19, 2026 05:30 AM GMT
Report

கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் பக்தர்களின் கண்ணீருக்கு விடை கொடுப்பவர். அப்படியாக முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரங்களில் "குமாரஸ்தவம்"வெறும் பாடல் மட்டுமல்ல எது 44 வரிகளை கொண்ட மாபெரும் பிஜ மந்திரங்களின் தொகுப்பாக இருக்கிறது. இதை இயற்றியவர் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருநாத ஸ்வாமிகள் ஆவார்கள்.

கிபி, 1918 ஆம் ஆண்டு பாம்பன் சுவாமிகளுக்கு கடுமையான வெப்பம் நோய் ஏற்பட்டது. அந்த கடுமையான உடல் பாதிப்பிலிருந்து விடுபடவும் முருகப்பெருமானின் பரிபூரண அருளை பெறவும் மனம் உருகி அவரே பாடிக்கொண்ட மந்திரம் இந்த குமாரஸ்தவம்.

தலையெழுத்தையே மாற்றும் முருகப்பெருமானின் மாபெரும் கவச மந்திரம் | Muruga Peruman Kumarasthavam Manthirangal

2026: தனுசு ராசிக்கு ராஜயோகம் எப்பொழுது தொடங்கும் தெரியுமா?

2026: தனுசு ராசிக்கு ராஜயோகம் எப்பொழுது தொடங்கும் தெரியுமா?

 

முருக பெருமானின் வேல், மயில், வள்ளி தெய்வானை அனைத்தையும் உள்ளடக்கிய கந்தபுராணத்தின் சுருக்கம் என்றும் இது போற்றப்படுகிறது. இந்த குமாரஸ்தவத்தை நாம் பாராயணம் செய்வதால் நமக்கு தீராத ஆரோக்கிய குறைபாட்டில் இருந்து விடுதலை கிடைக்கிறது. நீண்ட நாள் எதிரிகள் விலகி செல்வார்கள்.

நம்மை சூழ்ந்துள்ள கண் திருஷ்டி செய்வினை பில்லி சூனியம் போன்றவற்றிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கிறது. இந்தப் பாடலில் வரக்கூடிய "ஓம் நவநிதி பதயே நமோ நமஹ"என்ற வரி நமக்கு குறிப்பிட்ட அதீத பலன்களை கொடுப்பதாக சொல்கிறார்கள்.

அதாவது 9 வகையான செல்வங்களையும் நமக்கு இந்த மந்திரம் பாராயணம் செய்வதால் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இந்த மந்திரத்தை நம்பிக்கையோடு உச்சரித்து வருபவர்களுக்கு தலையெழுத்தே மாறக்கூடிய ஒரு அபார சக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அப்படியாக, இந்த மந்திரத்தை நாம் தினமும் பாராயணம் செய்ய முடிந்தால் பாராயணம் செய்யலாம் அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் மனமுருகி பாராயணம் செய்யும் பொழுது நிச்சயம் வாழ்க்கை நமக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி பாதை கிடைக்கும்.

தலையெழுத்தையே மாற்றும் முருகப்பெருமானின் மாபெரும் கவச மந்திரம் | Muruga Peruman Kumarasthavam Manthirangal

2026: பங்குனி அமாவாசை அன்று செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள்

2026: பங்குனி அமாவாசை அன்று செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள்

மந்திரங்கள்:

1. ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ

ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்

2. ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ

ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ

ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்

4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ

ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்

5. ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ

ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்

6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ

ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்

7. ஓம் நவநிதி பதயே நமோ நமஹ

ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்

8. ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ

ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்

9. ஓம் நரபதி பதயே நமோ நமஹ

ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்

10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ

ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ

ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்

12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ

ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்

13. ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ

ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்

14. ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ

ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்

15. ஓம் இகபர பதயே நமோ நம ஹ

ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்

16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ

ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்

17. ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ

ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்

18. ஓம் நயநய பதயே நமோ நம ஹ

ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்

19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ

ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்

20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ

ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்

21. ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ

ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்

22. ஓம் மல்ல பதயே நமோ நம ஹ

ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ

ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ

ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்

25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ

ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்

26. ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ

ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்

27. ஓம் அபேத பதயே நமோ நம ஹ

ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்

28. ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ

ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்

29. ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ

ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்

30. ஓம் மயூர பதயே நமோ நம ஹ

ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்

31. ஓம் பூத பதயே நமோ நம ஹ

ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்

32. ஓம் வேத பதயே நமோ நம ஹ

ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்

33. ஓம் புராண பதயே நமோ நம ஹ

ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்

34. ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ

ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்

35. ஓம் பக்த பதயே நமோ நம ஹ

ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்

36. ஓம் முக்த பதயே நமோ நம ஹ

ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்

37. ஓம் அகார பதயே நமோ நம ஹ

ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

38. ஓம் உகார பதயே நமோ நம ஹ

ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

39. ஓம் மகார பதயே நமோ நம ஹ

ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

40. ஓம் விகாச பதயே நமோ நம ஹ

ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்

41. ஓம் ஆதி பதயே நமோ நம ஹ

ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்

42. ஓம் பூதி பதயே நமோ நம ஹ

ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்

43. ஓம் அமார பதயே நமோ நம ஹ

ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்

44. ஓம் குமார பதயே நமோ நம ஹ.

ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US