நாளைய ராசி பலன் (20-03-2026)
மேஷம்:
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உங்கள் இலக்குகளை நோக்கி பயணம் செய்வீர்கள். சகோதரி வழிஉறவால் நன்மை அடைவீர்கள்.
ரிஷபம்:
குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நட்புகளை சந்திப்பீர்கள்.
மிதுனம்:
இன்று பொருளாதாரத்தில் ஒரு நல்ல உயரத்தை தொடுவீர்கள். மனதில் இருந்து வந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த விஷயங்களை நினைத்த நேரத்தில் முடிப்பீர்கள்.
கடகம்:
இன்று எதிர்பாராத முக்கிய நபரின் சந்திப்புகளை பெறுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் ரீதியாக ஒரு சிலரை அனுசரித்து செல்ல வேண்டிய நிலை உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
சிம்மம்:
எதிலும் நிதானத்தோடு செயல்படுவது அவசியம். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.
கன்னி:
நீண்ட நாள் தள்ளிப்போன காரியங்கள் இன்று நடைபெறும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.
துலாம்:
இன்று கடினமான வேலைகளையும் மிக சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். இன்று மனதில் வித்தியாசமான சிந்தனைகள் தோன்றும். கடன் சார்ந்த விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
விருச்சிகம்:
இன்று செய்யும் செயல்களில் ஆர்வம் இல்லாமல் இருப்பீர்கள். உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்ல வேண்டிய அவசியம். வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள். கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
உடல் நிலையில் சற்று மந்தமான நிலை காணப்படும். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நன்மையான நாள்.
மகரம்:
இன்று உங்கள் முயற்சிக்கு ஏற்ற வெற்றிகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றமும் எங்களுடைய எண்ணங்களும் நிறைவேறும் நாள்.
கும்பம்:
குடும்ப உறுப்பினர்களின் மனநிலையை அறிந்து செயல்படுவீர்கள். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மறைமுக எதிரிகளை வெல்வீர்கள். அதிர்ஷ்டமான நாள்.
மீனம்:
மற்றவர்களை பற்றிய கருத்துக்களை நீங்கள் இன்று யாரிடமும் பகிராதீர்கள். எதிர்பாராத சில செய்திகளால் அலைச்சல் உண்டாகலாம். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |