கடவுளால் நடத்தமுடியாத விஷயத்தை நடக்கச்செய்யும் சித்தர் வழிபாடு
இறைவழிபாடு என்பது ஒரு வகையான ஆழ்ந்த நம்பிக்கையை குறிக்கிறது. ஆக இறைவனை துளி சந்தேகம் இல்லாமல் சரண் அடைய வெற்றி நிச்சயம் கிடைக்கும்.அப்படியாக நாம் அனைவரும் சித்தர்கள் வழிபாடு பற்றி கேள்வி பட்டு இருப்போம்.
இருந்தாலும் பலருக்கும் இந்த வழிபாட்டின் முக்கியத்துவம் தெரிவதில்லை.அதாவது துன்பம் எல்லை மீறி போகும் பொழுது,ஏன் இறைவனும் நம் கரங்களை உதறும் பொழுது சித்தர்கள் அவர்கள் கரங்களை கொடுத்து தூக்கிவிடுவார்கள்.அதுதான் சித்தர்களின் மகிமை.அவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்தர் வழிபாட்டை எப்படி செய்வது?என்று பார்ப்போம்.
தவத்திற்கு மிஞ்சிய வழிபாடு எதுவும் இல்லை.அப்படியாக உங்களுக்கு எப்பேர்ப்பட்ட துன்பமாக இருக்கட்டும்.அல்லது,நீங்கள் கடவுளை உணர வேண்டும் என்று தவத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் இந்த சித்தர்கள் வழிகாட்டுதல் இல்லாமல் உங்களால் எதையும் முழுமையாக அடைந்திட முடியாது.
சிலருக்கு வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் எதுவும் அவ்வளவு எளிதில் நடப்பதில்லை.அதில் ஒன்று தான் திருமணம்.மனிதனாக பிறந்த எல்லோருக்கும் துணை என்பது மிக அவசியம்.அப்படியாக அவர்களுக்கு ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருக்கலாம்.
எவ்வளவு பரிகாரம் செய்தும் எந்த தீர்வும் கிடைத்திருக்காது.அப்படியானவர்கள் கண்களை முடி சித்தர்களை சரண் அடையுங்கள்.18 சித்தர்கள் அனைவரையும் மனதில் நிறுத்தி தவம் செய்ய தொடங்குங்கள்.அதாவது காலை வேளையில் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி 18 சித்தர்களையும் மனதில் வைத்து உங்கள் வேண்டுதல் வையுங்கள்.
ஆனால் சித்தர்கள் நமக்கு உடனே அருள் புரிவதில்லை.நம்முடைய இறைநம்பிக்கை,கர்ம வினைகள் பொறுத்தே அருள் புரிகிறார்கள்.இவ்வாறு நீங்கள் சித்தர்களை நினைத்து வேண்டுதல் வைக்க அவர்கள் முதலில் உங்கள் கர்மவினைகள் குறைய அருள்புரிவார்கள்.
பிறகு நீங்கள் கேட்ட வரத்தை வழங்குவார்கள். முடிந்தவர்கள் கட்டாயம் சித்தர்கள் சமாதி சென்று அங்கு வழிபட உங்களுடைய மாற்றத்தை நீங்கள் வெகு விரைவில் காணலாம். ஆனால் சித்தர்கள் பொறுத்தவரையில் அவர்களை சரண் அடையும் பொழுது "தான்"என்ற எண்ணம் இல்லாமல் தவம் செய்யவேண்டும்.
மனதில் அமைதி கொண்டவர்களையே சித்தர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் கிடைத்த நேரங்களில் சித்தர்களை நினைத்து தியானம் செய்து வர உங்கள் வாழ்க்கையில் நடக்கும் மாற்றத்தை நீங்க முழுமையாக உணரலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |