குழந்தைகளுக்கு கண் திருஷ்டி இருப்பதை உணர்த்தும் 3 அறிகுறிகள்
மனிதர்கள் அன்றாடம் சந்திக்கும் துன்பங்களில் கண் திருஷ்டி தவிர்க்க முடியாத ஒன்றாகும். கண் திருஷ்டியானது ஒருவரை மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளிவிட கூடிய எதிர்மறை ஆற்றல் கொண்டது.
அப்படியாக, சாதரண மனிதர்களுக்கே கண் திருஷ்டி இவ்வளவு பாதிப்பு கொடுக்கிறது என்றால், குழந்தைகளுக்கு கண் திருஷ்டி இன்னும், கூடுதல் பாதிப்பை கொடுத்து விடும். அப்படியாக, குழந்தைகளுக்கு கண் திருஷ்டி இருக்கிறது என்றால் அவை நமக்கு சில அறிகுறிகள் கொண்டு காண்பித்து விடும். அதை பற்றி பார்ப்போம்.
1. குழந்தைகளுக்கு கண் திருஷ்டி இருந்தால் அது முதலில் அவர்களின் உடல் நிலையை பாதிக்க செய்யும். அல்லது, அவர்கள் குணாதிசயங்களில் சில மாற்றங்கள் உண்டாக்கும்.
2. மேலும், கண் திருஷ்டி அதிகம் குழந்தைகளை தாக்கும் பொழுது அவர்கள் காரணமே இல்லாமல் உணவு எடுத்து கொள்வதை நிறுத்தி விடுவார்கள். பால் தண்ணீர் குடிப்பதில் கூட சிரமம் உண்டாகும்.
3. குழந்தைகள் காரணமே இல்லாமல் எல்லா விஷயங்களுக்கும் அழ தொடங்கி விடுவார்கள். சரியான தூக்கம் இல்லாமல் இரவு முழுவதும் அழுது கொண்டே இருப்பார்கள்.
இவ்வாறு குழந்தைகளிடம் திடீர் மாற்றம் ஏற்பட்டால் பாதுகாப்பிற்கு நல்ல மருத்துவரை சந்திப்பதோடு அவர்களுக்கு கண் திருஷ்டியை நீக்குவது மிக மிக அவசியமாகும். சிறு குழந்தைகள் என்பதால் அவர்களை எதிர்மறை ஆற்றல் எளிதாக தாக்கக்கூடும்.
ஆதலால் குழந்தைகளுக்கு கைகளில் அல்லது கால்களில் கருப்பு நிற கயிறு கட்டி விடுவது அவர்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். மேலும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் குழந்தைகளுக்கு உப்பு மற்றும் காய்ந்த வத்தல் கொண்டு கண் திருஷ்டியை கழிக்க 3 முறை சுற்றி போடவும்.
வீடுகளில் தினமும் விளக்கு ஏற்றி பூஜை செய்யும் பொழுது குழந்தைகளையும் உடன் வைத்து கொண்டு பூஜை செய்து வந்தால் அவர்களை எதிர்மறை ஆற்றல் நெருங்காது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |