சகல நன்மைகள் அருளும் மஹாலக்ஷ்மி தாயாரின் தீப வழிபாடு
எல்லா மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும்.அப்படியாக கார்த்திகை மாதம் ஐயப்பன் முருகப்பெருமானுக்கு சிறந்த மாதமாக இருந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை கூடுதல் விஷேசமாகவே கருதப்படுகிறது.
மேலும் கார்த்திகை மாதம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பது சிறப்புக்குரிய விசேஷம் ஆகும்.அன்றைய நாளில் மஹாலக்ஷ்மி தாயாரின் வழிபாட்டோடு சேர்த்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வதை பற்றி பார்ப்போம். மகாலட்சுமி தாயார் 108 பொருட்களில் வீற்றிருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே அறிந்தது.
அபப்டியாக அந்த சிறப்புக்குரிய பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து வழிபாடு செய்தால் மஹாலக்ஷ்மி தாயாரின் பரிபூர்ண அருளை பெறலாம்.இந்த வழிபாட்டை செய்ய உகந்த நேரமாக இரவு 8 மணி முதல் 9 மணி கருதப்படுகிறது.
அதிலும் அந்த நேரத்தில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்வதால் மிக சிறந்த பலனை பெற முடியும்.இந்த வழிபாட்டை மேற்கொள்ள வீட்டு பூஜை அறையில் ஒரு இடத்தை சுத்தம் செய்து பன்னீர் தெளித்து கொள்ள வேண்டும்.பிறகு பச்சரிசி மாவை கொண்டு ஒரு ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும்.
பிறகு அந்த ஸ்வஸ்திக் சின்னத்தில் சந்தானம் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும்.பிறகு அந்த ஸ்வஸ்திக் சின்னத்தில் 4 பக்கமும் நான்கு அகல் விளக்குகளை வைக்க வேண்டும்.ஸ்வஸ்திக் சின்னத்திற்கு நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
தாமரை தண்டு திதி கிடைக்காத பட்சத்தில் பஞ்சுத்திரி உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.அதோடு மஹாலக்ஷ்மி தாயாருக்கு நைவேத்தியமாக பால் பாயாசம் கற்கண்டு பொங்கல் படைக்கலாம்.பிறகு வாசம் நிறைந்த மல்லிகை பூவால் அந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
அந்த ஸ்வஸ்திக் சின்னத்தில் மஹாலக்ஷ்மி தாயார் வீற்றி இருக்கிறாள் என்று அனைவரும் அறிந்தது.ஆக இறுதியாக அந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு தூபம் காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது மஹாலக்ஷ்மி தாயாரின் பரிபூர்ண அருள் கிடைப்பதோடு நம்முடைய வீடு மஹாலக்ஷ்மி தாயாரின் அருளால் நிரம்பி விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |