2026: ஆடி அமாவாசை முன்னோர்கள் ஆசி பெற இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்

By Sakthi Raj Aug 12, 2026 05:33 AM GMT
Report

ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நாம் வழிபாடு செய்கின்ற பொழுது இறைவனுடைய முழு அருளையும் முன்னோர்களுடைய ஆசியையும் பெற முடியும்.

அந்த வகையில் ஆடி அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டிலும் அவர்களுடைய முன்னோர்களை நினைத்து படையல் இட்டு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், உண்மையில் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் இடுவது முன்னோர்களின் படங்கள் வைத்து சமைத்த உணவுகளை இலையில் போட்டு பரிமாறுவது என்று மட்டுமே எண்ணுவது தவறானது.

முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபாடு செய்வதற்கு என்று ஒரு முறை உள்ளது. அந்த முறையை நாம் சரியாக பின்பற்றி வழிபாடு செய்தால் மட்டுமே நமக்கு அதற்குரிய பலன் பெறலாம்.

அந்த வகையில், ஆடி அமாவாசை தினத்தன்று நம் முன்னோர்களுக்கு எந்த முறையில் படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

2026: ஆடி அமாவாசை முன்னோர்கள் ஆசி பெற இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள் | 2026 Aadi Amavasya Worship Details And Benefits

ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு படைக்க வேண்டியவை :

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு செய்கின்ற படையலில் சாதம், வடை, பாயாசம், அகத்திக்கீரை, பருப்பு, நெய் மற்றும் அவர்கள் விரும்பிச் சாப்பிட்ட பாரம்பரிய உணவுகள் இடம்பெற வேண்டும். மேலும், வாழை இலையில் இரண்டு இலைகள் போட்டு கருப்பு எள் மற்றும் தண்ணீருடன் இவற்றைப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

வாஸ்து: வீடுகளில் குளவி கட்டினால் இதை மட்டும் செய்து விடாதீர்கள்

வாஸ்து: வீடுகளில் குளவி கட்டினால் இதை மட்டும் செய்து விடாதீர்கள்

முன்னோர்களுக்கு வைக்கக்கூடிய படையலில் கட்டாயமாக வாழைக்காய் இடம்பெற்றிருக்க வேண்டும். பூசணிக்காய் அல்லது பரங்கிக்காய் போன்ற காய்கறி வகைகளும் முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையலிட்டு பூஜை செய்யும் முறை :

வழிபாடு செய்கின்ற பொழுது முன்னோர்களின் படங்களை தெற்கு சுவரில் மாட்டி அவர்களை வடக்கு நோக்கி பார்ப்பது போல் வைக்க வேண்டும். தெற்கு திசையை முன்னோர்களின் படங்களை வைப்பதற்கு உகந்த திசையாகும். முன்னோர்களின் அதிபதி எமன் என்பதால் தெற்கு நோக்கி அல்லது தெற்கு பார்த்தவாறு படையல் இடுவது அவசியம்.

2026: ஆடி அமாவாசை முன்னோர்கள் ஆசி பெற இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள் | 2026 Aadi Amavasya Worship Details And Benefits

உங்கள் பூஜை அறையில் பல்லி இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்? என்ன தெரியுமா

உங்கள் பூஜை அறையில் பல்லி இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்? என்ன தெரியுமா

வழிபாடு செய்பவர்கள் வடக்கு திசை நோக்கி அமர்ந்து முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும். மேலும், முன்னோர்களின் படத்திற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஒன்று ஏற்றி வைக்க வேண்டும். முன்னோர்களுடைய படம் வீடுகளில் இல்லாதவர்கள் வீட்டில் பூஜை அகல் விளக்கை மட்டும் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.

மேலும், முன்னோர்கள் படத்திற்கு துளசி மாலை அணிவித்து சாம்பிராணி புகை போட வேண்டும். வெற்றிலை பாக்கு இரண்டு வாழைப்பழம் சிறிது மல்லிகைப் பூ வைக்க வேண்டும் .நிறை செம்பு நீர் கண்டிப்பாக வைப்பது அவசியம். படையலில் கட்டாயமாக ஒற்றை இலை போடாமல் கட்டாயம் இரண்டு இலைகள் போடவேண்டும்.

தர்ப்பணம் அல்லது வீட்டில் படையில் போடும்போது தெற்கு திசை நோக்கி நின்று அல்லது அமர்ந்து தர்ப்பணம் மற்றும் நமஸ்காரம் செய்ய வேண்டும். அன்றைய தினம் காக்கைக்கு கிழக்கு திசை பார்த்து உணவு வைத்து பிறகு சிறிது நீர் விலவ வேண்டும்.

பசு மாட்டிற்கு அகத்தி கீரை தானமாக கொடுக்கலாம். மேலும், ஆடி அமாவாசை தினத்தன்று குளித்துவிட்டு சுத்தமான ஆடை உடுத்தி சமைக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் அருகில் கோவிலுக்கு சென்று ஒரு நெய் தீபம் ஏற்றி முன்னோர்களின் நினைத்து வழிபாடு செய்யலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US