2026: இன்று நடக்கும் குருவின் நட்சத்திர மாற்றம்.. பெயர் புகழ் பெறும் ராசிகள்
ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகமாக கருதக்கூடிய குரு பகவான் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 4. 43 மணிக்கு புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பெயர்ச்சியாகிறார். இந்த மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த கட்டாயமாக எல்லா ராசிகளுக்கும் பிரதிபலிக்கும். இதனால் ஒரு சில ராசிகளுக்கு நேர்மறையான தாக்கத்தை உண்டு செய்யும். அப்படியாக குருவின் இந்த நட்சத்திர மாற்றத்தால் எந்த ராசிக்கு பெயர் புகழ் திடீர் பதவி மாற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்டத்தை பெறக்கூடியவர்கள் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றமானது இவர்களுக்கு மனதில் நம்பிக்கையை வளர்க்கப் போகிறது. நீண்ட நாட்களாக முடிவெடுக்க தயங்கியவர்கள் தைரியமாக முடிவெடுத்து முன்னோக்கி செல்லக்கூடிய காலகட்டமாகும். வேலையில் தைரியமாக பேசி எதையும் சாதித்துக் கொள்வீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் இந்த இடமாற்றம் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய புதிய மாற்றத்தை கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்களாக வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியாக புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்வீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் நீண்ட நாட்களாக இவர்களுடைய கனவு நிஜமாக கூடிய வாய்ப்புகளை பெறப்போகிறார்கள். ஆன்மீக சிந்தனைகளில் அதிக ஈடுபாடு உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு தொடர்பான புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். பணம் பற்றாக்குறை விலகும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |