2026: அட்டகாசமான ஆகஸ்ட் மாதம்.. திடீர் திருப்பங்களை சந்திக்கப்போகும் கன்னி

By Sakthi Raj Jul 22, 2026 05:55 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தன்னுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியாக, புதனின் ஆதிக்கத்தை கொண்டு கன்னி ராசிக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

இவர்களுக்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும். அதே சமயம், சட்டம் மற்றும் நிறுவனங்களில் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான சில சிக்கல்கள் வரலாம்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலகட்டங்களில் நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். குடும்பத்தில் மன கவலைகள் நீங்க மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

2026 சனி வக்ர பெயர்ச்சி: துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்க போகிறது

2026 சனி வக்ர பெயர்ச்சி: துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்க போகிறது

குருபகவான் 11ஆம் இடத்தில் இருப்பதால் லாபம் கிடைக்கும். இருந்தாலும் சுக்கிர பகவான் நீசம் அடைவதால் பணப்பிரச்சனைகள் மற்றும் பொருளாதார இழப்புகளை நீங்கள் சந்திக்க கூடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகு உங்களுக்கு ஆறாம் இடத்தில் வருவதால் நற்பலன்களை கொடுப்பார்.

நீங்கள் இந்த காலகட்டங்களில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதும் துர்க்கை அம்மனுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்வதும் நல்ல பலன்களை கொடுக்கும். எலுமிச்சை பழம் விளக்கேற்றி துர்க்கை அம்மன் ஆலயங்களில் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

இவர்களுக்கு ஆடி அமாவாசை வழிபாடு மிகச் சிறப்பாக அமையும். மேலும் கன்னி ராசியினருக்கு ஆகஸ்டு மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US