2026: கார்த்திகை சோமவாரம் எப்பொழுது? அன்று சொல்ல வேண்டிய 5 மந்திரங்கள்
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமைகளை கார்த்திகை சோமவாரம் என்று அழைக்கிறார்கள். இந்த கார்த்திகை சோமவாரம் சிவபெருமான் வழிபாட்டிற்கு விரதத்திற்கும் மிக உகந்த நாளாக கருதப்படுகிறது.
மேலும், கந்த புராணங்களில் சொல்லக்கூடிய எட்டு சிவ விரதங்களில் கார்த்திகை சோமவார விரதம் ஒன்றாகும். இந்த கார்த்திகை சோமவார நாட்களில் தான் சிவபெருமான் ஆலயங்களில் சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் ஒருவருடைய வாழ்க்கையில் சந்திக்க கூடிய துன்பங்கள் விலகுகிறது.
அதைவிட, முக்கியமாக கார்த்திகை மாதம் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் அதாவது கார்த்திகை சோமவாரத்தில் சிவன் ஆலயங்களில் நடக்கக்கூடிய சங்கா அபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு நோயில்லாத வாழ்வும் செல்வ விருத்தியும் மன அமைதியும், குடும்ப ஒற்றுமையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்து மத சமயத்தில் சங்கு லட்சுமி கடாட்சத்தின் அடையாளமாக கருதப்படுவதால் சங்காபிஷேகத்தை ஒருவர் காண்கின்ற பொழுது அவர்களுக்கு செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.
மேலும், சோமவாரத்திற்கு உரிய சந்திரனை தலையில் சூடிக்கொண்ட சிவபெருமான் அவரை வழிபாடு செய்வதால் மன குழப்பங்கள், முடிவெடுப்பதில் சிக்கல் ஆகியவை விலகி தெளிவு கிடைக்கும்.
அதே போல், ஜாதகத்தில் சந்திரதோஷம் இருப்பவர்களும் இந்த சங்காபிஷேகத்தில் கலந்து கொள்வது அவர்களுக்கு ஒரு சிறந்த பரிகாரமாக அமையும். மேலும், இந்த நாளில் 108 அல்லது 1008 சங்கு கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஒரு சிலரால் இந்த கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருக்க முடியவில்லை சங்காபிஷேகம் செய்யவோ அல்லது அதை தரிசிக்கவோ முடியவில்லையே என்று கவலை கொள்ள வேண்டாம்.
அவர்கள் சிவபெருமானுடைய அருளை பெறுவதற்கு எளிமையான ஐந்து மந்திரங்களை பாராயணம் செய்து அவருக்கு விருப்பமான இந்த ஐந்து பொருட்களை படைத்து வழிபாடு செய்தால் முழுமையான பலனை பெற முடியும்.

கார்த்திகை சோம வாரத்தில் சொல்ல வேண்டிய சிவ மந்திரங்கள் :
1. சிவ பஞ்சாட்சர மந்திரம்:
"ஓம் நமசிவாய"
2. சிவ காயத்ரி மந்திரம் :
"ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"
3. மிருத்யுஞ்ஜய மந்திரம் :
"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்தனம்
உர்வாருகமிவ பந்தனான்
மிருத்யோர் முக்ஷீய மாம்ருநாத்"
4. சிவ நாமம் :
"ஹர ஹர மகாதேவா"
5. திருநாமம் :
"சிவாய நம ஓம்"
மந்திரங்களை சொல்ல வேண்டிய நேரம் :
கார்த்திகை சோமவார தினத்தன்று அதிகாலை அல்லது மாலை நேரங்களில் இந்த மந்திரங்களை பாராயணம் செய்யலாம். சிவபெருமான் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு. மனதை உருநிலை செய்து சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

சிவனுக்கு அர்ப்பணிக்க வேண்டிய 5 பொருட்கள் :
1. வில்வ இலை:
சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர். அதிலும் அவருக்கு வில்வ இலை என்றால் மிகவும் பிடித்தமானது. இந்த வில்வ இலை கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்ற பொழுது வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகிறது.
2. பால்:
இந்த நாளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வது குடும்பத்தில் அமைதியை உண்டு செய்யும்.
3. தூய நீர் :
சிவபெருமானுக்கு நீர் கொண்டு அபிஷேகம் செய்யலாம். அதிலும் வலம்புரி சங்கில் நிரம்பிய புனித நீர் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது மிகவும் புண்ணிய பலன்களை பெற்றுக் கொடுக்கிறது.
4. வெள்ளை மலர்கள் :
சிவபெருமானுக்கு வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
5. சந்தனம் :
சிவபெருமானுக்கு சந்தனம் சாற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
Disclaimer:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.