2026: சனிபகவானால் உருவாகும் சக்திவாய்ந்த சச யோகம்.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார்?
ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இந்த சச யோகம். இந்த யோகம் சனி பகவானால் உருவாகக்கூடிய ஒரு மிகப்பெரிய ராஜயோகமாகும்.
அதாவது, சனி பகவான் தன்னுடைய சொந்த ராசிகளான கும்பம், மகரம் ஆகிய வீடுகளில் அல்லது உச்ச ராசியான துலாம் வீட்டிலிருந்து லக்னத்திற்கு 1,4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் அமரும்போது இந்த யோகம் உருவாகிறது.
பொதுவாக, இந்த சச யோகம் பெறுபவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த செல்வாக்கு அதிகாரம் நிலையான செல்வம் நிர்வாக திறன் மற்றும் சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் வாழக்கூடிய யோகத்தை பெறுவார்கள், அதிலும், குறிப்பாக சில ராசிகளுக்கு இந்த யோகம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய கிரகங்களின் அமைப்பின்படி சனியின் சாதகமான ஆதரவால் இவர்களுக்கு தொழில் மற்றும் வியாபார ரீதியாக மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கப் போகிறது.
நீண்ட நாள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவார்கள். எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் இவர்களுக்கு நினைத்தது போல் நடக்கும். சமுதாயத்தில் மரியாதையும் உயர்வையும் பெறுவார்கள். பூர்விக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சச யோகத்தால் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த காரியங்கள் மிக வேகம் எடுத்து வெற்றிகரமாக அமைகிறது. அரசு சார்ந்த வேலைகள் வழக்குகள் மற்றும் காரியங்கள் வெற்றிகளை பெறும்.
வேலை மற்றும் தொழிலில் உங்களுடைய திறமைக்கேற்ற மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும். கனவு நினைவாகும்.
| ன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |