2026: இன்று நடக்கும் சூரியன் பெயர்ச்சி.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் யார் ?
சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் பொழுதும் அவருடைய ராசியை மாற்றுகிறார். அந்த வகையில் மே 15 ஆம் தேதி சூரிய பகவான் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கங்கள் உண்டாக்கும். சூரியன் பெயர்ச்சியால் எந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம்? யார் இந்த காலகட்டங்களில் மிகப்பெரிய அளவில் நன்மையை பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த ரிஷப ராசி பெயர்ச்சியை முன்னிட்டு இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கப்போகிறது. தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு வாழ்க்கையில் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதேபோல் புதிய தொழில் தொடங்குவது பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை நீங்கள் உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத சொத்துக்கள் இந்த காலகட்டம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு மிகவும் சாதகமான பலனை கொடுக்கப்போகிறது. வழக்கு விஷயங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ரீதியாக புதிய கூட்டாளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வீர்கள். உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் திருமணம் தொடர்பான பேச்சுக்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |