இந்த 3 ராசிக்காரர்கள் கடன் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டுமாம்

By Sakthi Raj Jun 14, 2026 05:39 AM GMT
Report

 நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் தனக்கு பிடித்ததை செய்வதற்கு கடன் வாங்க அஞ்ச மாட்டார்கள். அதேபோல் அந்த நபர்களுக்கு எப்பொழுது கேட்டாலும் கடன் எளிதாக கிடைத்துவிடும்.

ஆதலால் அவர்களுக்கு அடிக்கடி கடன் வாங்கக்கூடிய பழக்கம் உருவாகிறது. இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு சில நேரங்களில் காரணமாக அமைந்து விடுகிறது. இதனால் அளவிற்கு மீறி கடன் சுமையில் சிக்கி விடுகிறார்கள். அந்த வகையில், எந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கு பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த 3 ராசிக்காரர்கள் கடன் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டுமாம் | 3 Zodiac Who Must Be Careful Borrowing Money

2026 அமாவாசை :தோஷம் விலக இன்று செய்ய வேண்டிய முக்கியமான 12 தானங்கள்

2026 அமாவாசை :தோஷம் விலக இன்று செய்ய வேண்டிய முக்கியமான 12 தானங்கள்

கடகம்:

கடக ராசிக்காரர்கள் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிபவர்கள். இவர்கள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யவும் நண்பர்களுக்காக உதவ வேண்டும் என்று ஒருவரிடம் கடன் வாங்கி இவர்கள் சிக்கிக் கொள்வது உண்டு.

பிறகு அந்த கடனை அடைப்பதற்கு மற்றொருடன் கடன் வாங்குகிறேன் என்று இவர்களுடைய கடன் இவ்வாறு தொடர்ந்து கொண்டே இருப்பதால் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் அவை கைகளில் நிற்பதில்லை. அதை போல் இவர்களுடைய நல்ல எண்ணத்திற்கு இவர்களை சுற்றி எப்பொழுதும் கடன் கொடுப்பதற்கு நபர்கள் தயாராக இருப்பார்கள்.

அதனால் இவர்கள் தேவையை பூர்த்தி செய்வதற்கு அடிக்கடி கடன் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும், வாங்கிய கடனை இவர்கள் மறந்துவிடுவதும் உண்டு, அதனால் அவர்கள் அதற்கு உரிய தொகையை அதிக அளவில் செலுத்தக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த கிழமையில் தவறியும் இந்த தெய்வத்தை வழிபாடு செய்து விடாதீர்கள்

இந்த கிழமையில் தவறியும் இந்த தெய்வத்தை வழிபாடு செய்து விடாதீர்கள்

தனுசு:

தனுசு ராசியினர் ஆடம்பரத்தையும் சுதந்திரத்தையும் விரும்பக் கூடியவர்கள். இவர்கள் எப்பொழுதும் தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும், சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்து இருக்க வேண்டும் என்று காட்டிக் கொள்வதற்கு இவர்கள் கடன் வாங்குவதற்கு துணிவதில்லை.

கடன் வாங்கியாவது நாம் ஒரு சில விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் துணிந்து செய்யக்கூடியவர்கள். அதேபோல் வியாபாரத்தில் இவர்கள் கண்மூடித்தனமாக செலவு செய்து சில கடன்களில் சிக்கிக் கொள்வது உண்டு. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US