ஏப்ரல் மாதத்தில் நினைத்தது எல்லாம் சாதிக்க போகும் டாப் 4 ராசிகள்
ஜோதிடத்தில் கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும். அந்த கிரக மாற்றத்தால் எல்லா ராசிகளுக்கும் ஒருவித தாக்கம் உண்டாகும். அதில் ஏப்ரல் மாதத்தில் சனி செவ்வாய் சேர்க்கை நடக்க உள்ளது.
இந்த சேர்க்கையினால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தொழில் மற்றும் பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும், எதிர்பாராத அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது. இவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அப்படியாக ஏப்ரல் மாதத்தில் நினைத்தது எல்லாம் பொன்னாகும் யோகம் பெரும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் பல விதமான நன்மையும் தெளிவும் கொண்டு வர போகிறது. எதிர்பாராத திடீர் திருப்புமுனை இந்த ராசிகளுக்கு உருவாகும். சிலருக்கு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் புது புது வாய்ப்புகள் தேடி கொடுக்க போகிறது. பல நாள் கஷ்டம் கொடுத்த பிரச்சனை வந்த வழி தெரியாமல் போகும் மாதம் ஆகும். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் நல்ல முறையில் தீர்வு பெரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை சந்திக்க கூடிய மாதமாகும். செய்யும்வேலையில் வெற்றிகள் தேடி வரும். வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு உருவாகும். குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் மன ரீதியாக நல்ல மாற்றம் கொடுக்கும். சிலருக்கு பணம் தொடர்பான விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |