2025 கேது பெயர்ச்சி பலன்கள்: ராஜ யோகம் எந்த ராசிகளுக்கு?
நிழல் கிரகங்களாக ராகு கேது இருக்கிறது. இவர்கள் ஜோதிடத்தில் அசுப கிரகங்களாக இருக்கிறார். இந்த ராகு மற்றும் கேது எப்பொழுதும் பின்னோக்கிய பயணத்தை செய்பவர்கள். இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றோரு ராசிக்கு செல்ல சுமார் 18 மாதங்கள் எடுத்து கொள்வார்.
மேலும் ராகு கேதுவும் வெவ்வேறு ராசியில் பயணம் செய்தாலும் செயல்பாடுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அந்த வகையிக் கடந்த 2023ஆம் அக்டோபர் மாதம் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் அவருடைய பயணத்தை மேற்கொண்டார்.
அந்த வகையில் கேது பகவான் 2025 ஆம் ஆண்டு மே மாதம் சிம்ம ராசிக்கு செல்கிறார். இதனால் 12 ராசிகளும் ஒரு வித தாக்கத்தை சந்திப்பார்கள். இந்த பெயர்ச்சியால் எந்த ராசிகள் வெற்றியை சந்திக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு இந்த கேது பெயர்ச்சி மிக பெரிய வெற்றியை கொடுக்க போகிறது. மனதில் நம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் ஆகும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் விலகும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வீர்கள்.
மீனம்:
மீன ராசிக்கு இந்த கேது பெயர்ச்சி மனதில் நல்ல மாற்றத்தை கொடுக்கும். இவர்களுக்கு 18 மாதங்கள் ராஜ வாழ்க்கை உண்டாகும். கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றிகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
துலாம்:
துலாம் ராசிக்கு இந்த கேது பெயர்ச்சி மனதிலும் உடலிலும் பலத்தை கொடுக்கும். வங்கியில் சேமிப்புகள் அதிகரிக்கும். வருமானத்தில் உள்ள தடை விலகும். மனதிலும் கும்பத்திலும் உற்சாகம் உருவாகும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |