இன்று சிவராத்திரி அன்று அனைவரும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த 7 சிவ மந்திரம்
சிவன் என்றாலே பாவங்களை அழிக்கக்கூடியவர்.மனிதராக பிறந்த எல்லோருக்கும் சிவ நாமம் சொல்லும் பாக்கியம் கிடைப்பதில்லை.எவர் ஒருவருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறதோ அவர்கள் பிறவா வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
மேலும்,சிவ பக்தர்களின் அதிகப்படியான வேண்டுதலே எம்பிரானே பிறவா வரம் அருளும்;பிறந்தால் உன்னை துதிக்கும் மறவா அருள் வழங்கிடுவாய் ஐயா என்பதே ஆகும்.ஆக,சிவ நாமம் சொல்லுபவர்கள் எவரும் பொன்,பொருள் விரும்புவதில்லை,அவனின் கோடானகோடியான திருநீறை நெற்றி நிறைய பூசிக்கொள்ளவே ஆசைப்படுவார்கள்.
அப்படியாக,சிவபெருமானின் முக்கிய விஷேசமாக மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி இருக்கிறது.அன்றைய நாள் விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்வதால் நமக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது.சிவ வழிபாட்டின் முக்கியமானதாக அவனின் மந்திரங்கள்.
ஆக சிவனை நினைத்து மனம் உருகி வழிபாடு செய்யும் பொழுது அவனின் இந்த மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியம் நடக்கும்.நம்மை நாடி வரும் இன்னல்கள் விலகும்.இன்று பிப்ரவரி 26 மஹாசிவராத்திரி அன்று நாம் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த 7 சிவ மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
சக்திவாய்ந்த சிவ மந்திரங்கள்:
1. மகாமிருத்யுஞ்ஜய மந்திரம் :
"ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்"
2. நீல கண்ட மகாதேவ மந்திரம் :
"ஓம் நமோ நீலகண்டாய"
3. சிவ காயத்ரி மந்திரம் :
"ஓம் மகாதேவாய வித்மஹே ருத்ரமூர்த்தய தீமஹி தன்னோ சிவ ப்ரதோதயாத்"
4. ருத்ர காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தன்னோ ருத்ர ப்ரசோதயாத்"
5. சிவ மூல மந்திரம்:
"ஓம் நம சிவாய"
6. தக்க்ஷிணாமூர்த்தி சிவ மந்திரம் :
" ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்தயே மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஞம் ப்ரயச்ச ஸ்வாஹா"
7. மிருத்யுஞ்ஜய மகாதேவ மந்திரம் :
"ஓம் மிருத்யுஞ்ஜய மகாதேவாய த்ரஹிமம் ஷரணாகதம் ஜன்ம மிருத்யு ஜரா வ்யாதிபிடைடம் கர்மா பந்தனய"
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.