யாரும் தப்பிக்க முடியாத கர்மாவின் 9 விதிகள் பற்றி தெரியுமா?
உலகம் என்பது மனிதர்கள் பிறந்தார் இறந்தார் என்று இல்லாமல் அவர்கள் வாழ்க்கை முறை,மனித நேயம் அன்பு பரிவு பாவம் புண்ணியம் இவை எல்லாம் ஒரு சேர புரிந்து எந்த அளவு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.அப்படியாக ஒவ்வொரு வினைக்கும் மறு வினை உண்டு.
அது நிச்சயம் நடந்து தீரும்.அதன் பெயர் தான் கர்மா.அப்படியாக கர்மா 9 விதிகள் தெரியுமா?
முதல் விதி
வாழ்வில் எதுவும் அதுவாக நடப்பதில்லை. நமக்குத் தேவையானதை நாம் தான் நடத்திச் செல்ல வேண்டும்.அப்படி நடத்தி செல்வதில் நம்முடைய அணுகுமுறை தான் எந்த அளவு நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று தீர்மானிக்கிறது.
இரண்டாவது விதி
வாழ்க்கையில் சில தவறுகள் நடந்து விடுகிறது.இல்லை விதி சில ஏற்று கொள்ள முடியாத நிகழ்வுகளை கொடுத்து விடுகிறது என்றாலும் சிலவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அடுத்து நம்முடைய வாழ்க்கையில் மாற்றம் நிகழும்.
மூன்றாவது விதி
கடந்த காலம் எதுவாக இருந்தாலும்,நாம் மனம் திருந்து நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் பொழுது நம்வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும்.
நான்காவது விதி
எந்த ஒரு நல்லதோ கெட்டதோ நம் வாழ்வில் நிகழ்பவற்றிற்கு நாமே பொறுப்பு என்று உணர வேண்டும்.
ஐந்தாவது விதி
நேற்று இன்று நாளை என இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதே.அதை சுற்றி தான் நம்முடைய வாழ்க்கையும் அமைந்து இருக்கிறது.
ஆறாவது விதி
ஒரு சமயத்தில் இருவேறு விஷயங்களை சிந்திக்க முடியாது ஏழாவது விதி நம் நடத்தை நமது சிந்தனையும் செயலையும் பிரதிபலிக்க வேண்டும்.
எட்டாவது விதி
நம்முடைய முன்காலத்தையே நாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய நிகழ்காலம் நம்மை விட்டு போய் விடும்.
ஒன்பதாவது விதி
எல்லாம் இறைவனிடம் விட்டுவிட்டு இனிவரும் காலத்திலும் நம்முடைய நற்செயல்களை நம்முடைய கர்ம வினையை நாம் குறைக்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |