ஆடி பெருக்கு அன்று வீட்டில் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்?

By Sakthi Raj Aug 03, 2024 05:32 AM GMT
Report

ஆடி மாதத்தில் வரும் ஆடி பெருக்கு மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.அன்றைய நாளில் நாம் வீட்டில் இருந்து எவ்வாறு வழிபாடு செய்யலாம் என்று பார்க்கலாம்

ஆடி பெருக்கில் வீட்டில் பூஜை செய்ய ஒரு இடத்தை தேர்ந்துஎடுத்து அந்த இடத்தை சுத்தம் செய்து,அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன்முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

ஒரு தாம்பாலத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்யச் சரடு என்று பெண்கள் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைக்க வேண்டும்.

ஆடி பெருக்கு அன்று வீட்டில் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்? | Aadi Perukku Aadi Masam Festival

பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், சூரிய பகவானையும் வணங்க வேண்டும்.

பிறகு வீட்டில உள்ள வயது முதிர்ந்த சுமங்கலி பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்தவேண்டும்.அதன்பிறகு, அந்த பெண் தனது வீட்டு சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார்.

ஆடி அமாவாசை: மறந்தும் இந்த விடயங்களை செய்துவிடாதீர்கள்

ஆடி அமாவாசை: மறந்தும் இந்த விடயங்களை செய்துவிடாதீர்கள்


அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள். அப்படி செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஆடி பெருக்கு அன்று வீட்டில் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்? | Aadi Perukku Aadi Masam Festival

புனித நதிக்கரைகளுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள், வீட்டின் பூஜையறையில் ஒரு சொம்பில் தூய்மையான தண்ணீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் போட்டு நிவேதனம் வைத்து, ஏழு புனித நதிகளின் பெயரை கூறி வணங்கினால் போதுமானது.

அதோடு இந்த நாளில் மகாலட்சுமி மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாக ஐதீகம்.

ஆகையால் குபேரனையும், மஹாலட்சுமியையும் இந்த நன்னாளில் வணங்குவதால் குறைவற்ற செல்வம் வீட்டில் நிலைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US