தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பவரா நீங்கள்? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்
இந்த கலியுகத்தில் மனிதர்கள் சந்திக்கக்கூடிய துயரத்திற்கு உடனடியாக பதில் கிடைக்க வேண்டும் என்றால் கட்டாயமாக பற்றிக் கொள்ள வேண்டிய தெய்வம் கலியுக வரதன் முருகப்பெருமான் தான். மேலும், முருகப்பெருமானுக்கு பொறுமையாக செயல்படுவது என்பது பிடிக்காத ஒன்று.
உங்களுக்கு துயர் என்று அவர் முன் அழுதுவிட்டீர்கள் என்றால் அந்த துயரை உடனடியாக போக்க என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாக செய்து விடுவார். அதேபோல், முருக பக்தராக இருந்து நீங்கள் ஏதேனும் தவறு செய்கிறீர்கள் என்றாலும் அதற்கும் உடனடியாக அவர் தண்டனையை கொடுத்து தக்க பாடத்தை கற்பிக்கக் கூடியவர்.
அப்படியாக முருகப்பெருமானுக்கு பல பாடல்கள் இருக்கிறது. அதில் மிகவும் சக்தி வாய்ந்த கவசமாக கந்த சஷ்டி கவசம் உள்ளது. இந்த கந்த சஷ்டி கவசம் ஆனது எவ்வளவு பெரிய அதிசயம் என்று அதை பாடி பலன் பெற்றவர்களிடமிருந்து நாம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அதாவது குழந்தை பாக்கியம் இல்லை, எதிரிகளால் தொல்லை, வேலையில் தடைகள், பண பிரச்சனை என்று எந்த ஒரு சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து மனதார இந்த கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தால் உடனடியாக உங்கள் வாழ்க்கையில் நடக்கின்ற அதிசயங்களையும் திருப்பங்களையும் நீங்கள் காணலாம்.
அந்த வகையில் தினமும் ஒருவர் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
1. தினமும் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தால் வீட்டில் உள்ள பீடை, தரித்திரம், தீய சக்திகள் ஆகியவை விலகும்.
2. ஒரு மனிதனுக்கு செல்வம் வேண்டும் என்றால் அவன் கட்டாயமாக மகாலட்சுமி ஆசிர்வாதத்தை பெற்றிருக்க வேண்டும். அப்படியாக கந்த சஷ்டி கவசம் நீங்கள் பாராயணம் செய்யும்போது மகாலட்சுமியின் அருள் கிடைப்பதோடு வீடுகளில் மன அமைதியான சூழ்நிலை உண்டாகும்.

3. தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யும் பொழுது அந்த நபருக்கு புகழ் மரியாதை முகத்தில் வசீகரம் ஆகியவை அதிகரிக்கும்.
4. தினமும் படிக்க முடியாதவர்கள் கூட செவ்வாய்க்கிழமை தோறும் நீங்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யும் பொழுது நீங்கள் நினைத்து காரியம் கைகூடிவரும்.
5. கந்த சஷ்டி விரத நாளில் விரதம் இருந்து கோவிலில் முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி கவசம் பாராயணம் செய்தால் நடக்கவே நடக்காது என்று கைவிட்ட விஷயங்கள் கூட முருகப்பெருமான் உங்களுக்கு நடத்தி காட்டுவார்.
6. தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யும் பொழுது உங்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் யாவும் கட்டாயம் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |