ஜாதகம் இல்லாதவர்கள் திருமணத்திற்கு எவ்வாறு பொருத்தம் பார்க்க வேண்டும்?
திருமணம் செய்யும் முன் சிலர் கட்டாயம் ஜாதக பொருத்தம் பார்த்து செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு அவர்களுடைய பிறப்பு ஜாதகம் இல்லாமல் இருக்கலாம். அவ்வாறு ஜாதகம் இல்லாதவர்கள் எவ்வாறு திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
ஜோதிடத்தில் பல வகைகள் இருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒரு வகையாக பெயர் பொருத்தம் பார்ப்பது இருக்கிறது. இதை எண் ஜோதிடம் என்று சொல்லுவார்கள். நாம் திருமணத்திற்கு வரன் பார்க்கும் பொழுது இந்த எண் ஜோதிடத்தின் அடிப்படையிலும் நாம் வரன் பார்த்து திருமணம் செய்யலாம்.
இந்த எண் கணித ஜோதிடம் வைத்து ஒருவருடைய குண நலன்களை நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படியாக திருமணத்தின் பொழுது மணமக்களின் பெயரைக் கொண்டு அவர்கள் இருவருக்கும் எவ்வளவு பொருத்தம் இருக்கிறது என்று பார்த்து நாம் திருமணம் செய்யலாம் இந்த எண் கணித ஜோதிடத்தில் சில எண்கள் ஒன்றுக்கொன்று மிகச் சிறப்பாக பொருந்த கூடியதாக இருக்கிறது.
அதாவது 1,2,7 ஆகிய எண்கள் இணையும் பொழுது நல்ல புரிதலும் அவர்கள் கிடையே அன்பும் ஏற்பாடு. 3,6,9 ஆகிய எண்கள் இணையும் பொழுது அவர்கள் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் வளர்ச்சியும் வரும்.
அதே இது 4 மற்றும் 8 என்ற எண்கள் இணையும் பொழுது சிறு சிறு சவால்களை அவர்கள் வாழ்க்கையில் சந்திக்க கூடும்.
மேலும் எவ்வளவுதான் ஜோதிடத்தை கணித்து திருமணம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தாலும் தம்பதியர் இடையே நல்ல அன்பும் பிணைப்பும் விட்டுக் கொடுத்து செல்லுதல் போன்ற விஷயங்களும் இருந்தால் மட்டுமே அவர்களுடைய திருமண வாழ்க்கை ஜாதகத்தையும் தாண்டி நல்ல வெற்றியை பெரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







