ஜோதிடம்: அதிர்ஷ்டம் நிறைந்த நாளைய (5-5-2025) தினத்தில் இதை செய்ய மறக்காதீர்கள்
ஜோதிடத்தில் பல வகை இருக்கிறது. அதில் ஒன்று தான் எண் கணிதம். எண்கள் கொண்டும் நாம் நிறைய விஷயங்களை கணிக்க முடியும். அந்த வகையில், நாளை மே 5 2025 மிக பெரிய அதிசயங்கள் நிகழ உள்ளதாக சொல்லப்படுகிறது.
5-5-5 என்ற எண் மிகவும் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. இந்த தினம் மே மாதத்தில் புதனின் இரட்டை பெயர்ச்சிக்கு முன்னதாக வருகிறது. அப்படியாக, இந்த 5-5-5 மே மாதத்தின் 5ஆம் தேதி 2025ஆம் ஆண்டு கடைசி இலக்கத்தாலும் 5-5-5 என்று கணக்கிடப்படுகிறது.
மேலும், இந்த எண் 5 ஏஞ்சல் எண் என்று சொல்கிறார்கள். இதனால் நாளை மிக பெரிய மாற்றங்களும் அதிசயங்களும் நிகழ உள்ளது என்கிறார்கள். அதிலும், நாளை பிறக்கும் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக பிறக்கக்கூடும் என்கிறார்கள்.
மேலும், இந்த நாளில் பிறந்தவர்களுக்கு நாளை புதிய மாற்றங்களும் அதிசயங்களும் நிகழ உள்ளதாம். வாழ்க்கையில் நினைத்த விஷயங்களை சாதிக்கக்கூடிய சக்தி பிறக்கும் என்கிறார்கள்.
பொதுவாக 11:11 என்ற எவ்வாறு அதிர்ஷ்ட எண்ணாகவும், அந்த நேரத்தில் அல்லது அந்த எண்ணை பார்க்கும் பொழுது நாம் நினைத்த விஷயங்கள் எல்லாம் நடக்கும் என்று எவ்வாறு நம்பிக்கை இருக்கிறதோ, அதே போல் தான் நாளையும் அதிர்ஷ்ட நாள் என்று சொல்கிறார்கள்.
குறிப்பாக 5 என்ற எண் 3 முறை தோன்றும் போது அதன் ஆற்றல் அதிகரித்து நமக்கு மிக முக்கியமான அதிர்ஷ்ட நிகழ்வை உண்டாக்கக்கூடும். எனவே நாளைய தினத்தில் நம் ஆசைகளை நிறைவேற சரியாக காலை 5 மணிக்கு அல்லது மாலை 5 மணிக்கு மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ள நிச்சயம் இந்த பிரபஞ்சம் நமக்கான வழியை காட்டும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |