பாவங்களை போக்கும் ரத்த ஓட்டம் கொண்ட எட்டுக்குடி முருகன்
எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளை தவிர புகழ்பெற்ற முருகன் ஆலயத்தில் முக்கியமானது எட்டுக்குடி முருகன் கோயில், குழந்தைகளுக்கு அருள் புரியும் தலமும் ஆகும்.
நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாய்மூரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது எட்டுக்குடி முருகன் கோயில்.
தல வரலாறு
பொருள்வைத்த சேரி என்ற ஊரில் வாழ்ந்து வந்த சிற்பி ஒருவர் முருகன் சிலை ஒன்றை செதுக்கினார்.
இதனை பார்த்த மன்னன், இதுபோன்ற தெய்வீக சிலையை செதுக்க கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியின் கட்டை விரலை வெட்டி வீசினான்.
இதனால் வேதனையடைந்த சிற்பி, பக்கத்து ஊருக்கு வந்து சிலை செய்யத் தொடங்கினார்.
சிற்பம் முழுவதும் முடிவதற்குள்ளேயே ஒளி வீசத் தொடங்கி உயர்வந்தது, முருகன் அமர்ந்திருக்கும் மயில் பறக்கத் தொடங்கியது.
இதனை பார்த்த மன்னர் ”எட்டிப்பிடி” என கூற அதுவே ஊரின் பெயராகவும், நாளடைவில் எட்டிக்குடி என்றும் ஆனது.
இங்குள்ள முருகனின் கோபத்தை தணிக்கும் வகையில் நாள்தோறும் பாலபிஷேகம் நடைபெறுகிறது.
பக்தர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப முருகன் காட்சி தருவார் என்பது கூடுதல் சிறப்பு, குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், பெரியவராக பார்த்தால் பெரியவராகவும் அருள்பாலிக்கிறார்.
சித்ரா பௌர்ணமியன்று மிக சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது, குடும்பத்தில் பிரச்சனை இருப்பவர்கள் முருகனுக்கு புது வஸ்திரம் வழங்கி வழிபட்டால் பிரச்சனைகள் நீங்கும், மாலை சூடி வேண்டினால் வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை.
தீபாவளி அன்று கடைபிடிக்கப்படும் கேதார கௌரி விரதம் தோன்றிய தலம் இதுவாகும், இங்கு நடத்தப்படும் சத்ரு சம்ஹார பூஜையும் சிறப்பு வாய்ந்த ஒன்று.
சூர சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்தே புறப்பட்டதாக ஐதீகம், பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு சென்ற 9 வீரர்களுக்கும் சிலைகள் உள்ளது.
இதில் கூடுதல் சிறப்பு முதன்முதலில் செதுக்கப்பட்ட எட்டுக்குடி முருகன் சிலையில் இருந்து வெளியேறும் ரத்தமே!!!