இன்றைய ராசி பலன்(02-04-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு அலுவலகத்தில் சில தொந்தரவுகள் உண்டாகும். எதையும் ஆலோசித்து செயல்படுவது நன்மை அளிக்கும். நினைத்த காரியம் சில தாமதத்திற்கு பிறகு நடைபெறும்.
ரிஷபம்:
சுப செய்திகள் உங்களை தேடி வரும். சிலருக்கு தாய் தந்தை இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இன்று பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.
மிதுனம்:
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். இன்று வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நன்மையான நாள்.
கடகம்:
நீண்ட நாட்களாக மனதில் இருந்து பாரம் குறையும். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு உயரும். முயற்சிக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
சிம்மம்:
வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
கன்னி:
இன்று வேலையில் சில சிக்கல்கள் உண்டாகும். பெரிய மனிதர்கள் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். பிறரை அனுசரித்து செல்வது நல்லது. முன்னேற்றமான நாளாக அமையும்.
துலாம்:
சிலருக்கு வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும். வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதானமாக செயல்படுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை நீங்கும்.
தனுசு:
சிலருக்கு மனதில் சில சிக்கல் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் போட்டியாளர்கள் விட்டு விலகி செல்வார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
மகரம்:
பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விருப்பம் பூர்த்தியாகும். விழிப்புடன் செயல்படுவதால் உங்கள் வேலைகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.
கும்பம்:
வருமானத்தில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். அந்நியரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சிலர் வீண்பழிக்கு ஆளாவீர்.
மீனம்:
மனதில் உண்டான குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடன் இருந்தவர்களின் குணநலன்களை அறிந்து கொள்வீர்கள். இறைவழிபாட்டிற்குரிய நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |