நாளைய ராசி பலன் (18-05-2026)

Report

 மேஷம்:

இன்று உங்கள் வீடுகளில் சில முக்கியமான நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களின் மதிப்பு உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷபம்:

இன்று படிப்பில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் உண்டாகும். உங்களுக்கான வங்கி கணக்கை துவங்கி சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவீர்கள்.

மிதுனம்:

இன்று தேவையில்லாத வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கடந்த கால பிரச்சனைகள் மீண்டும் துவங்கலாம். நெருங்கியவர்களுக்காக ஒரு சிலரிடம் சண்டையிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

கடகம்:

இன்று நீங்கள் நெருங்கியவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வேலை பளு அதிகரிக்கும். செலவு செய்வதற்கு முன் பலமுறை யோசித்து செய்வது அவசியமாகும்.

சிம்மம்:

அரசு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல் விலகும். வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலர் சமுதாய பணிகளில் ஈடுபடுவீர்கள்.

கர்ம வினை நம்மை விட்டு எப்பொழுது முழுமையாக அகலும் தெரியுமா ?

கர்ம வினை நம்மை விட்டு எப்பொழுது முழுமையாக அகலும் தெரியுமா ?

கன்னி:

இன்று எதிர்காலம் தொடர்பான பயம் உருவாகும். குடும்பத்தில் குழப்பமும் சில கருத்து வேறுபாடுகளும் உண்டாகலாம். அரசியலில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்:

இன்று காலை முதல் மனம் பதட்டத்துடன் காணப்படும். எதிர்காலம் பற்றிய கவலைகள் மேலோங்கும். ஒரு சிலருக்கு பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். மதியம் மேல் எல்லாவற்றையும் சமாளீப்பீர்கள்.

விருச்சிகம்:

சொந்தங்களால் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். நீங்கள் நினைத்த விஷயம் நடப்பதற்கு கால தாமதம் ஆகலாம். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

தனுசு:

இன்று பிள்ளைகள் வாழ்க்கையில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சொந்தங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.

மகரம்:

இன்று நண்பர்கள் மத்தியில் தேவை இல்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். நெருங்கிய உறவுகளை சமாளித்து செல்வது அவசியம். ஒருவருக்கு கடன் கொடுக்கும் முன் யோசிக்க வேண்டும்.

2026: மே மாதம் கடைசி 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

2026: மே மாதம் கடைசி 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

கும்பம்:

குடும்பத்தில் தேவை இல்லாத வார்த்தைகள் பயன்படுத்தாதீர்கள். எதிர்கால தேவைக்கான சில விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.

மீனம்:

இன்று சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகள் வாழ்க்கை ரீதியாக முக்கியமான முடிவுகள் எடுக்கக் கூடிய நிலை உருவாகலாம். சொந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US