யாரை கண் திருஷ்டி அதிகம் பாதிக்கும்-அதற்கான பரிகாரம் என்ன?
கண் திருஷ்டி என்பது மிகவும் கொடூரமான ஒன்று.அதனால் தான் முன்னோர்கள் "சொல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது:' என்றார்கள்.ஆக,ஒருவரை இந்த கண் திருஷ்டி என்ன செய்திட போகிறது என்று அவ்வளவு சுலபமாக எடை போட்டு விடக்கூடாது.
இந்த கண் திருஷ்டி ஒருவருக்கு மிக பெரிய தீய பலன்களை கொடுக்கும்.வாழ்க்கையை தலைகீழாக மாற்ற கூடிய அதீத சக்தி உடையது.இருந்தாலும்,ஒரு சிலர் தான் இந்த கண் திருஷ்டிக்கு அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
அதாவது,கண் திருஷ்டி ஒருவரது ஜாதகத்தில் இலக்னம், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால், அந்த நபர்களை கண் திருஷ்டி எளிதில் பாதிக்கும். இலக்னாதிபதி 6, 8, 12ஆம் வீட்டில் மறைந்திருந்தால், அவர்களுக்கு கண் திருஷ்டி பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும்.
சிலருக்கு செய்வினையாக மாறவும் வாய்ப்புண்டு. அப்படியாக இந்த கண் திருஷ்டி நம்மை நெருங்காமல் இருக்க என்ன செய்வது என்று பார்ப்போம்.
கண் திருஷ்டி நெருங்காமல் இருக்க அல்லது அதற்கான பரிகாரம் செய்தாலும் உங்கள் மனதில் இறைவன் இல்லை என்றால் எளிதில் கண் திருஷ்டி பாதிப்புக்கு ஆளாகுவோம்.நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க குலதெய்வம் அருள் கட்டாயம் இருக்க வேண்டும்.
யார் ஒருவர் குலதெய்வத்தை இறுக்கமாக பற்றி கொள்கிறார்களோ அவர்களுக்கு எந்த ஒருவித பாதிப்பும் உண்டாகுவதில்லை.அதே போல் நீங்கள் மனதில் சிவ மந்திரம் அடிக்கடி சொல்லி வர எப்பேர்ப்பட்ட எதிர்மறை ஆற்றலும் உங்களை நெருங்குவதில்லை.
மேலும்,யார் ஒருவர் இறைவனின் திரு உருவத்தை முழுமையாக கண்குளிர பார்த்து மகிழ்கிறார்களோ அவர்களை எந்த கண் திருஷ்டியும் எதுவும் செய்வதில்லை.
பெண்களாக இருந்தால் வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு அந்த தீப ஒளியை சற்று நேரம் பார்த்தபடி வேண்டுதல் வைக்கவேண்டும்.ஆண்களாக இருந்தால் வாரம் ஒருமுறையாவது பூஜை அறையில் விளக்கு ஏற்றிய தீப சுடரை பாருங்கள்.அவ்வாறு செய்வது உங்களுக்கு ஒரு வித மன உறுதியை கொடுக்கும்.ஆக எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் உங்களை நெருங்காது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |