எண் கணிதம்: 11, 12, 13, 14, 15 ஆகிய தேதியில் பிறந்தவர்களின் கவனத்திற்கு..
ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த எண் கணிதத்தை கொண்டும் நாம் ஒருவருடைய எதிர்கால வாழ்க்கையை கணித்து விடலாம். அந்த வகையில் 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட குறியீடு என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
முதலில் 11 ஆம் தேதியில் பிறந்தவர்கள் எடுத்துக்கொண்டால் இவர்களுடைய ஆற்றல் இவர்களுக்கே பல நேரங்களில் தெரியாமல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இவர்களிடம் ஹனுமனிடம் இருக்கக்கூடிய பலம் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
அது மட்டுமல்லாமல் எதிர்த்து யாரையாவது போட்டியிடும் பொழுது தான் இவர்களுடைய பலம் தெரியவரும். காரணம் இவர்களை விட அதிக பலமிக்கவர்களை இவர்கள் எதிர்க்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களை எதிர்க்கும் பொழுது அங்கு அவர்களைநிரூபித்தும் விடுகிறார்கள்.
மேலும், இவர்களுடைய அதிர்ஷ்ட குறியீடாக குரங்கு படத்தை இவர்கள் வைத்துக் கொள்ளும் பொழுது தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதையும் துணிச்சலாகவும் சுறுசுறுப்பாகவும் உழைத்துப் போராடக்கூடிய அமைப்பு இவர்கள் பெறுவார்கள்.
மேலும், எந்த எண்களில் பிறந்தவர்களுக்கு எது அதிர்ஷ்டக் குறியீடு என்று கீழ்காணும் காணொளியில் பார்க்க தெரிந்து கொள்வோம்.